\
Mammootty Makes a Comeback to Tamil Cinema After 7 Years!
Mammootty instagram

7 ஆண்டுகளுக்குப் பிறகு.. தமிழ் சினிமாவில் மம்மூட்டி ரீ என்ட்ரி!

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட 'ஓம்' திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஓம்' திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மம்மூட்டி கலந்துகொண்டு பேசினார்.

Mammootty
Mammootty instagram

அப்போது, இப்படம் ரசிகர்களின் மனதைத் தொடும் வகையில் ஆழமான உணர்வுகளுடன் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சாய் பல்லவியின் இயல்பான நடிப்பையும், தனுஷின் அசத்தலான நடிப்பையும் வெகுவாகப் பாராட்டினார். குறிப்பாக, தனுஷின் திரைப்பயணத்தில் இது மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Mammootty Makes a Comeback to Tamil Cinema After 7 Years!
புதுமையான சீரியல் கில்லர் vs போலீஸ் கதை... ஸ்டைலிஷ் திரைக்கதையில் அசத்தும் ஜீத்து! | Scene Review