Mammootty
MammoottyMammootty

குசேலன் Recreate : "எனக்கு மம்மூட்டினு பெயர் வெச்ச நண்பர் இவர் தான்!" - மம்மூட்டி நெகிழ்ச்சி

முகமது குட்டி, அந்தப் பெயர் எனக்கு அவ்வளவு பிடிக்கவில்லை. எனவே என்பெயரை கேட்பவர்களிடம் ஓமர் ஷெரீஃப் என சொல்வேன். எல்லோரும் ஓமர் என அழைப்பார்கள்.
Published on

இந்திய சினிமாவில் முதன்மையான நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. உடல்நலக்குறைவு காரணமாக சினிமாவில் இருந்து சிறிது இடைவெளி எடுத்திருந்தவர் சமீபத்தில் உடல்நலம் தேறி மீண்டும் படப்பிடிப்புகளிலும், பொது நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார் மம்மூட்டி. சமீபத்தில் கேரளாவில் ஊடகம் நிறுவனம் நடத்திய நிகழ்வு ஒன்றில் மம்மூட்டி கலந்து கொண்டு, தனது  உண்மையான பெயரான முகமது குட்டி இஸ்மாயில் என்ற பெயரை மம்மூட்டி என மாற்றியவர் குறித்து இந்த நிகழ்வில் அவர் பேசியிருக்கிறார்.

Mammootty
Mammootty

நான் மகாராஜா கல்லூரியில் படிக்கும் காலத்தில் என்னுடைய பெயர் வேறு ஒன்றாய் இருந்தது. அதுதான் முகமது குட்டி. அந்தப் பெயர் எனக்கு அவ்வளவு பிடிக்கவில்லை. எனவே என்பெயரை கேட்பவர்களிடம் ஓமர் ஷெரீஃப் என சொல்வேன். எல்லோரும் ஓமர் என அழைப்பார்கள். ஒரு நாள் நண்பர்களுடன் நடந்து சென்றுக் கொண்டிருக்கும்போது என்னுடைய பாக்கெட்டிலிருந்து அடையாள அட்டை தவறி கீழே விழுந்துவிட்டது. அதை எடுத்துக் கொடுத்த நண்பர் அடையாள அட்டையைப் பார்த்தார். அவர் என்னிடம் முகமது குட்டி என்கிற பெயரைச் சுருக்கி 'உங்களுடைய பெயர் மம்மூட்டியா?' எனக் கேட்டார். அப்போதிருந்து நண்பர்கள் அனைவரும் என்னை மம்மூட்டி என அழைக்கத் தொடங்கினார்கள்.

Mammootty
வாழ்நாள் சாதனையாளர் விருது| ”இன்னும் 100 ஜென்மங்கள் எடுத்தாலும்..” எமோசனலாக பேசிய ரஜினி!

நிறைய பேர் எனக்கு பெயர் வைத்த அந்த நபர் யார் என கேட்டிருக்கிறார்கள். எனக்கு அந்த பெயரை இட்ட நண்பர் இப்போது இங்குதான் இருக்கிறார். அவருடைய பெயர் சசிதரன். பலர் எனக்கு பெயர் வைத்த கிரெடிட்ஸை எடுத்துக்கொண்டார்கள். அதைப் பற்றி செய்தித்தாள்களிலும் எழுதினார்கள். ஆனால் உண்மையில் எனக்கு மம்மூட்டி எனப் பெயர் வைத்தவர் இவர்தான். நான் இவரை ஒரு ரகசியமாகப் பாதுகாத்து வந்தேன். பல ஆண்டுகளாக இவரை மறைத்து வைத்திருந்தேன். இவரை பெரிய கூட்டத்தின் முன்பு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இங்கு நடந்ததில் மகிழ்ச்சி" என்றார். குசேலன் பட ரஜினி பாணியில் தன் நண்பனை மம்மூட்டி மேடை ஏற்றிய இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com