“செட்டில் இயக்குநர் பாலா என்னை அடித்தார்...” - நடிகை மமிதா பைஜூ

வணங்கான் படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக அப்படத்தில் இருந்து விலகிய நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.
மமிதா பைஜூ, பாலா
மமிதா பைஜூ, பாலாpt web

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான். இத்திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த நிலையில், கருத்துவேறுபாடுகள் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகினார்.

இதனையடுத்து அருண்விஜய் நடித்து திரைப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி நடித்துள்ளனர்.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படத்தின் டீசர் வெளியானது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படத்தின் டீசர் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ‘பிரேமலு’ படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட நடிகை மமிதா பைஜூ, வணங்கான் படத்தில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ளார். அதில், “வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன்; அப்படத்தில் ‘வில்லடிச்சா மாடன்’ என்றொரு பாடல் இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும்.

நான் அப்போதுதான் அதை கற்றுக்கொண்டிருந்தேன்; திடீரென அவர் (இயக்குநர் பாலா) என்னை அதை செய்துகாட்டும்படி கூறினார். அப்போது நான் அதற்கு தயாராகி இருக்கவில்லை, அதனால் பதற்றமாகிவிட்டேன். அச்சமயம் எனக்கு பின்னாலிருந்த அவர் (பாலா) என்னை தோள்பட்டையில் அடித்தார்.

‘நான் அவ்வபோது திட்டுவேன், பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க’ என அவரே (இயக்குநர் பாலா) செட்டிலேயே சொல்லிவிடுவார்... சிலசமயங்களில் அவரிடம் அடிவாங்கியிருக்கிறேன். சூர்யா சார், ஏற்கெனவே அவரோடு படம் பண்ணியிருப்பதால் அவர் எப்படியென தெரிந்துவைத்திருந்தார். புதிதாக இணைந்ததால் எனக்குத்தான் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com