madras high court bans to thug life movie illegal online release
thug life, madras high courtx page

’தக் லைஃப்’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

’தக் லைஃப்’ படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Published on

கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ’தக் லைஃப்’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ’தக் லைஃப்’ திரைப்படம் உலகெங்கிலும் நாளை வெளியாக உள்ளது. இந்தப் படத்தைச் சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிக்கள் ஆகியவற்றில் வெளியிடுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

madras high court bans to thug life movie illegal online release
thug lifex page

இவ்வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் ’தக் லைஃப்’ படம் வெளியாகவுள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தைத் தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரைக் கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, ’தக் லைஃப்’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

madras high court bans to thug life movie illegal online release
தக் லைஃப் பட வழக்கு | நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? – கமலுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com