ரஜினி படத்தை இயக்குகிறார் லோகேஷ்; மீண்டும் அனிருத் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
lokesh, rajni
lokesh, rajnipt web

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. சிவ ராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பல மொழிகளின் பிரபலங்களும் நடித்து இருந்ததால் அந்தந்த மாநிலங்களிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயிலர் திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் போன்றோருக்கு தயாரிப்பாளர் கலாநிதிமாறன் விலையயர்ந்த கார்களை பரிசாக வழங்கினார். அதேபோல் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தங்க நாணயம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

rajni 171
rajni 171

இந்த நிலையில், ரஜினிகாந்தி அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதனை தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பேட்ட, ஜெயிலர் என ரஜினிகாந்தின் படங்களுக்கு தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார் அனிருத். அதேபோல், விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களுக்கும் அனிருத்தே இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அனைத்துப் படங்களுமே ஹிட் தான். தற்போது, விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் உடன் சூப்பர் ஸ்டார் ஆக திகழும் ரஜினிகாந்த் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com