கூலி திரைப்படம் தோல்வி குறித்து லோகேஷ் கனகராஜ்
கூலி திரைப்படம் தோல்வி குறித்து லோகேஷ் கனகராஜ்web

“ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்காக என்னால் கதை எழுத முடியாது..” - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் காம்போவில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கூலி.
Published on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ’கூலி’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான் உள்ளிட்ட பல திரை சூப்பர் ஸ்டார்களும் நடித்துள்ளனர். மேலும், நடிகை பூஜா ஹெக்டே ’மோனிகா’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்த நிலையில், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் ’கூலி’ படம் ஆகஸ்டு 14ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸானது.

கூலி - ரஜினிகாந்த்
கூலி - ரஜினிகாந்த்pt web

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. விமர்சன ரீதியில் பின்னடைவு, படத்திற்கு ஏ தணிக்கை சான்றிதழ் போன்றவை கூலியின் வசூலை பாதிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது உலகளவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது கூலி.

கூலி திரைப்படம் தோல்வி குறித்து லோகேஷ் கனகராஜ்
உலகளவில் ரூ.500 கோடி வசூல்| சம்பவம் செய்த கூலி..!

ரசிகர்களுக்காக என்னால் கதை எழுதமுடியாது..

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பு மற்றும் உற்சாகத்தைப் பற்றி நாம் குறை சொல்ல முடியாது.. கூலியைப் பொறுத்தவரை, இது ஒரு டைம் டிராவல் கதையோ அல்லது LCU-வில் ஒரு பாகமோ என்று நான் சொல்லவேயில்லை.. நான் டிரெய்லரை கூட முதலிலேயே வெளியிடவில்லை, 18 மாதங்கள் அதை ரகசியமாகவே வைத்திருந்தேன்..

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்pt web

என்னால் ஒருபோதும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்காக கதை எழுத முடியாது.. நான் ஒரு கதை எழுதுவேன்.. அது அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால், நான் நன்றாக இருக்கிறேன். ஒருவேளை அது நடக்கவில்லை என்றால் நான் தொடர்ந்து முயற்சிப்பேன்” என்று பேசியுள்ளார்.

தற்போதைய வசூல் நிலவரப்படி கூலி திரைப்படம் இந்திய அளவில் 280 கோடி ரூபாயும், உலகளவில் 510 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது.

கூலி திரைப்படம் தோல்வி குறித்து லோகேஷ் கனகராஜ்
மொத்தமாக சறுக்கிய பெரிய நட்சத்திரங்களின் படங்கள்.. விடாமுயற்சி முதல் கூலி வரை., என்ன பிரச்னை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com