லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்pt web

“ஆதரவு தாருங்கள்” - அடுத்தக்கட்ட பயணத்தில் லோகேஷ் கனகராஜ்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
Published on

தமிழ்த்திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படங்களாக மட்டுமே கொடுத்து வருகிறார். அவரது திரைப்படத்தின் சிறிய கதாப்பாத்திரங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,முகநூல்

உதாரணமாக கைதி திரைப்படத்தில் ஜார்ஜ் மரியன் கதாப்பாத்திரத்தையும், விக்ரம் திரைப்படத்தில் மாயாவின் கதாப்பாத்திரத்தையும் கூறலாம். சமீபத்தில் அவர் இயக்கிய லியோ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் அவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளதை தெரிவித்துள்ளார். நிறுவனத்திற்கு G Squad என பெயரிடப்பட்டுள்ளது.

அவர் தெரிவித்துள்ளதாவது, “5 படங்களை இயக்கிய பிறகு எனது தயாரிப்பு முயற்சியாக G Squad தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதல் சில திரைப்படங்கள் எனது நண்பர்கள் மற்றும் எனது உதவியாளர்களின் க்ரியேட்டிவ் ஐடியாக்களை ஊக்குவிப்பதற்காக பணியாற்ற இருக்கிறோம். நீங்கள் இதுவரை எனக்கு அளித்த ஆதரவை இதற்கும் அளிக்க வேண்டும் என விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com