”இதுமட்டும் நடந்தால் உடனே ஸ்டார்ட் பண்ணிடலாம்..” - லியோ 2 குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யதர்ஷினியிடம் கலாய்த்தபடி பதிலளித்தார்.
லியோ வெற்றிவிழா
லியோ வெற்றிவிழாட்விட்டர்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி கடந்த அக்.19 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'லியோ'. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு துவங்கியது. இதில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கெளதம் வாசுதேவமேனன், மிஷ்கின், நடிகர் விஜய், அர்ஜூன், நடிகை உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.

லோகேஷ் கனகராஜ்- லியோ
லோகேஷ் கனகராஜ்- லியோ

இவ்விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி, ’இப்போது எல்லோரும் கிஃப்ட் தர்றாங்க. உங்களுடைய கிஃப்ட் என்ன ஆச்சு’ எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த “என்னுடைய கிஃப்ட் என்ன ஆச்சுனு தயாரிப்பாளர்கிட்ட கேட்டேன். ‘ஹெலிகாப்டருக்கு பெயின்ட் அடிச்சிட்டு இருக்காங்க’ எனச் சொன்னார். அதைக் கேட்டதும், ’ஹெலிகாப்டரில் வந்து இறங்கித்தான் லியோ-2வை அறிவிப்பீங்களா’ என திவ்யதர்ஷினி கேட்டார். அதற்கு லோகேஷ், ‘முதலில் ஹெலிகாப்டர் வரட்டும். பின்னர், அது வந்ததும் லியோ-2 குறித்து அறிவிக்கிறேன்’ கலாய்த்தபடி சொன்னார்.

இதையும் படிக்க: ’முதல்வன்’ பட பாணியில் நடிகர் அர்ஜூன் கேட்ட கேள்வி! விஜய் சொன்ன ’நச்’ பதில்.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

ஒரு படம் வெற்றி பெற்றால் படத்தின் நாயகன், இயக்குநர்களுக்கு கார் அல்லது பரிசுத் தொகை வழங்கும் பழக்கம் சமீபகாலமாக பேசுபொருளாகி வருகிறது. அந்தவகையில், நேர்காணல் ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “எனக்கு வசூல் குறித்த பிரச்னைகள் இல்லை. அது எவ்வளவு வசூலீட்டினாலும் எனக்கு கவலை இல்லை.

நஷ்டம் வராமல் இருந்தால் போதும். படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கேட்டால் நான் பட வெற்றிக்காக எனக்கு ஹெலிகாப்டர் வேண்டுமென கேட்பேன்” எனக் கூறியிருந்தார். இதையடுத்தே, லியோ வெற்றி விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி இந்தக் கேள்வியை இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டுள்ளார்.

அத்துடன், “தளபதி விஜய் அண்ணா ஒரு கண்ணு காமிச்சா போதும் லியோ 2 அறிவிச்சுட்டு உடனே படத்தை பண்ணிடலாம்” என்று லோகேஷ் சொன்னார்.

முன்னதாகப் பேசிய நடிகை த்ரிஷா, “இன்னும் விஜய் எனக்கு காரபொரி வாங்கித் தரவில்லை. அதனால், அவரோடு இன்னொரு படம் பண்ணலாமா?” என்றார்.

இதையும் படிக்க: மராத்தா இடஒதுக்கீடு: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விடுத்த முக்கிய வேண்டுகோள்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com