லியோ திரைப்பட சர்ச்சை: ரசிகர்கள் காட்சிக்காக அதிகாலை 4 மணிக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு

அதிகாலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி கேட்டும் காலை 9 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கே முதல் காட்சியை திரையிட அனுமதிக்க வேண்டுமென செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Actor vijay
Actor vijayvijay insta

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நாள்தோறும் 5 காட்சிகளை திரையிடலாம் என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிட வேண்டுமென்றும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Actor vijay
9 மணிக்குதான் முதல் ஷோ! ’லியோ’ சிறப்பு காட்சிகள் குறித்து விஜய் ஃபேன்ஸ்க்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
Madras high court
Madras high courtpt desk

இந்நிலையில், அதிகாலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி கேட்டும் காலை 9 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கே முதல் காட்சியை திரையிட அனுமதிக்க வேண்டுமென செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாளை காலை இந்த வழக்கை விசாரிப்பதாக கூறியுள்ளார்.

leo dancers
leo dancersfile image

இந்நிலையில், ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாதென்று மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ள நிலையில், அந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டிருந்தால் அதன் ஆவணங்களை ஆய்வு செய்ய பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Actor vijay
“லியோ வெற்றியடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” - நடிகர் ரஜினிகாந்த்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com