“நான் நலமாக இருக்கிறேன்...” - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘பாட்டுக்கு பாட்டு’ அப்துல் ஹமீது!

தான் இறந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.எஸ்.அப்துல் ஹமீது விளக்கமளித்துள்ளார்.
பி.எஸ்.அப்துல் ஹமீது
பி.எஸ்.அப்துல் ஹமீதுமுகநூல்

தனித்துவமான குரல் உச்சரிப்பு, தமிழ்மொழியை அழுத்தம், திருத்தமாக பேசுவதன் மூலம் பிரபலமடைந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி. எஸ். அப்துல் ஹமீது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாட்டு நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

பி. எஸ். அப்துல் ஹமீது
பி. எஸ். அப்துல் ஹமீது

90களில் பிறந்தவர்களின் மனங்கவர்ந்த பி.எஸ். அப்துல் ஹமீது உடல்நலக்குறைவால் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. ஆனால், இதுவெறும் வதந்தி என அப்துல் ஹமீது விளக்கமளித்துள்ளார்.

பி.எஸ்.அப்துல் ஹமீது
விஷச்சாராய உயிரிழப்பு 34 ஆக அதிகரிப்பு.. “விசாரணை அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும்” ஆட்சியர் உறுதி!

முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், "இலங்கையில் நலமுடன் இருக்கிறேன். இது வெறும் வதந்தி. பலர் என்னை தொடர்புக் கொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். அந்த காணொளியை, இங்கே காணலாம்...

முன்னதாக பி.எஸ். அப்துல் ஹமீது இறந்துவிட்டதாக மூன்று முறை செய்தி வெளியாகி பின்னர் அது வதந்தி என உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com