”செய்த முதலீட்டில் 35% கூட கிடைக்கவில்லை”- நஷ்ட தொகையை கேட்கும் ’லாபம்’ பட விநியோகஸ்தர்கள்

”செய்த முதலீட்டில் 35% கூட கிடைக்கவில்லை”- நஷ்ட தொகையை கேட்கும் ’லாபம்’ பட விநியோகஸ்தர்கள்
”செய்த முதலீட்டில் 35% கூட கிடைக்கவில்லை”- நஷ்ட தொகையை கேட்கும் ’லாபம்’ பட விநியோகஸ்தர்கள்

லாபம் படத்தின் நஷ்டத்தை திருப்பிக் கொடுக்க வேண்டுமென தயாரிப்பாளரிடம் கேட்க அப்படத்தின் விநியோகஸ்தர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லாபம். இந்தப் படத்தை ஆறுமுக குமார் என்பவருடன் விஜய் சேதுபதி இணைந்து தயாரித்து இருந்தார். ஊரடங்குக்குப் பிறகு வெளியான இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ஆனால் படத்திற்கு எதிர்மறை விமர்சனம் கிடைத்ததால் வசூல் ரீதியில் வெற்றி அடையவில்லை. அதுவும் தாங்கள் முதலீடு செய்த தொகையில் 35% கூட திரும்ப கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

இதனால் தமிழகத்தில் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள், அப்படத்தின் தயாரிப்பாளர்களான ஆறுமுக குமார் மற்றும் விஜய் சேதுபதியிடம் நஷ்டத்தை திருப்பிக் கேட்க திட்டமிட்டிருக்கின்றனர். குறிப்பாக பாண்டிச்சேரி, திருச்சி, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் சந்தித்து நஷ்டத்தை திருப்பி கேட்க திட்டமிட்டிருக்கின்றனர். முதற்கட்டமாக ஆறுமுக குமாரிடம் அவர்களில் சிலர் பேசி இருப்பதாகவும், தன்னால் முடிந்தவரை உதவுவதாக அவர் தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com