Avantika Sundar
Avantika SundarAarambham

நடிகையாக அறிமுகமாகும் குஷ்பூ - சுந்தர் சி மகள்! | Avantika Sundar | Khushbu

சில மாதங்கள் முன்பு நகைக்கடை விளம்பரத்தின் மாடலாக அவந்திகா நடித்தது பற்றி உணர்வுபூர்வமான குறிப்பை பதிவு செய்தார் குஷ்பூ.
Published on
Summary

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் மூத்த மகள் அவந்திகா, 'ஆரம்பம்' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். லண்டனில் நடிப்பு பயின்ற அவந்திகா, தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன் மலையாள படத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மிகப்பிரபலமான தம்பதி சுந்தர் சி - குஷ்பூ. சுந்தர் சி இயக்கிய முதல் படமான `முறைமாமன்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் குஷ்பூ. அப்போது இவர்களுக்குள் காதல் மலர இருவரும் 2000வது ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா மற்றும் ஆனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் இளைய மகளான ஆனந்திதா மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவரின் `பொன்னியின் செல்வன்', `பொன்னியின் செல்வன் 2' மற்றும் `தக் லைஃப்' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

தற்போது மூத்த மகளான அவந்திகா சினிமாவில் தனது பயணத்தை துவங்கியுள்ளார். சில மாதங்கள் முன்பு நகைக்கடை விளம்பரத்தின் மாடலாக அவந்திகா நடித்தது பற்றி உணர்வுபூர்வமான குறிப்பை பதிவு செய்தார் குஷ்பூ. இப்போது அவந்திகா `ஆரம்பம்' என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

Aarambham
Aarambham
Avantika Sundar
'ஆயிரத்தில் ஒருவன் 2' வருவது என் கையில் இல்லை..' - செல்வராகவன் | Selvaragavan | Aayirathil Oruvan 2

சுஜேஷ் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று திரிசூரில் நடைபெற்றுள்ளது. இப்படத்தில் அவந்திகா மற்றும் சரிதா முதன்மை பாத்திரங்களில் நடிக்க அல்தாஃப் சலீம், இந்திரன்ஸ், விஜயராகவன், கலாபவன் ஷாஜோன் உட்பட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆரம்பம் முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட அவந்திகா லண்டன் சென்று நடிப்பு கற்று வந்தார். விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகுமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மலையாள படத்தின் மூலம் சினிமா என்ட்ரி கொடுக்கிறார் அவந்திகா. இப்படம் தமிழிலும் வெளியாகும் என தகவல்.

Avantika Sundar
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம், நெட்ஃப்ளிக்ஸில் ஆவணப்படம்? | Vijay Devarakonda | Rashmika

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com