விஜய்சேதுபதி நடித்த கருப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
அரைடஜன் படங்களை கையில் வைத்து இருக்கும் விஜய் சேதுபதி ரேணிகுண்டா இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் கருப்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. இந்தப்படத்தில் கிராமத்து நாயகனாக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.
இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. அவர் ஜல்லிகட்டு காளையை அடக்குவது போல் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றதில் இருந்து காளையை அடக்குவது போன்ற சில காட்சிகள் சில படங்களில் இடம் பெற்று வருகிறது. கருப்பன் படம் ஜல்லிக்கட்டை மையமாக அமைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால், ஜல்லிக்கட்டு காட்சி இடம்பெற்றுள்ளது இந்தப்போஸ்டர் மூலம் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் இயக்குநர் அட்லீ இயக்கி வரும் மெர்சல் பட போஸ்டரும் ஜல்லிக்கட்டு காட்சிகள் அப்படத்தில் இருப்பதை தெளிவுபடுத்தி உள்ளன. ஆக, விஜயும், விஜய்சேதுபதியும் வாடிவாசலில் களமிறங்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது.