\
சூர்யா உடன் இணையும் இயக்குநர் மாரி செல்வராஜ்?

சூர்யா உடன் இணையும் இயக்குநர் மாரி செல்வராஜ்?

சூர்யா உடன் இணையும் இயக்குநர் மாரி செல்வராஜ்?
Published on

நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியதின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இவர் அடுத்ததாக சூர்யா உடன் இணைய இருப்பதாகவும் அந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். அதற்கு அடுத்தப்படியாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com