’10 பேர் தான் வர்ராங்க’ காற்று வாங்கும் தியேட்டர்கள்..பாக்ஸ் ஆபிஸில் படுத்தேவிட்ட கங்கனாவின் தேஜஸ்!

கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தேஜஸ் திரைப்படம் பெருத்த நஷ்டமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கங்கனா
கங்கனாpt web

கங்கனா ரணாவத் சமீபத்தில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் தேஜஸ். இத்திரைப்படம் அக்டோபர் 27 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்பத்தினை சர்வேஷ் மேவாரா இயக்கி இருந்தார். ஏறத்தாழ ரூ.60 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகி இருந்தது. விமானப்படை அதிகாரியாக இத்திரைப்படத்தில் கங்கனா ராணாவத் நடித்திருந்தார்.

ஆனால் மக்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது. திரைப்படம் பார்க்க ரசிகர்கள் திரையரங்கிற்கு வராததால் பல திரையரங்குகள் காட்சியை ரத்து செய்தன. திரைப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் மொத்தமாகவே ரூ. 3.80 கோடியை மட்டுமே வசூலித்திருந்தது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு டிக்கெட் கூட விற்பனை ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. 5 பேர், 10 பேர் மட்டுமே வருவதால் நிறைய இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக கங்கனா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வரலாற்றை மையமாகக் கொண்டு எமர்ஜென்சி திரைப்படத்தினை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக கங்கனா நடிப்பில் தமிழில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படமும் பெரிதாக பேசப்படவில்லை. கடுமையான எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. வசூல் ரீதியிலும் படம் தோல்வி அடைந்தது.

இதற்கிடையில் பலருக்கும் கங்கனா ரனாவத் சிறப்புக்காட்சிகள் ஏற்பாடு செய்து வருகிறார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள் பலரும் படத்தை போட்டு காண்பித்துள்ளார். அதேபோல் உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆத்யநாத் தேஜஸ் திரைப்படத்தை பார்த்து கண்கலங்கிவிட்டார் என தெரிவித்திருந்தார் கங்கனா ரனாவத்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com