சினிமா
நடிகை விவகாரம்: வக்கீலை தண்டிப்பது போல் உள்ளது: கமல் டிவிட்
நடிகை விவகாரம்: வக்கீலை தண்டிப்பது போல் உள்ளது: கமல் டிவிட்
நடிகர் கமல்ஹாசன் சென்னையில் பேட்டி அளித்தபோது, கேரளாவில் மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை குறிப்பிட்டார். பாலியல் வன்முறைக்கு உள்ளானவரின் பெயரை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்தார்.
இதையடுத்து கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ’நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று விரும்பினால் கேட்பேன். சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை. பெண்களை நேசிப்பவனும், அவர்களின் உரிமைக்காகவும் போராடுபவனும் நான். நான் யாருக்காகவும் வளைந்து கொடுப்பவன் அல்ல. குற்றவாளிகளை விட்டுவிட்டு வக்கீலை தண்டிப்பது போல் உள்ளது’ என்று கூறியுள்ளார்.