தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் இந்த மாதம் வெளியாகிறது
சில வருடங்களாக முடங்கிப்போய் இருந்த இந்தத் திரைப்படம் பல கட்ட போராட்டங்களுக்குப் பின்பு இம்மாதம் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூவமாக அறிவித்துள்ளது.
அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களை இயக்கிய தங்கர்பச்சானின் அடுத்த படம் களவாடிய பொழுதுகள். நீண்ட கால காத்திருப்புக்குப்பின் இத்திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா என பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்யராஜ், கருப்புராஜா, சத்தியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
நான்கு பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பி.லெனின் மற்றும் பிரேம் கையாண்டுள்ளனர். ஒளிப்பதிவுடன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தங்கர் பச்சான். ஐங்கரன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படம் இம்மாதம் வெளியாகும் என்று மட்டுமே தெரிவித்துள்ளனர். எந்தத் தேதி என்பதை பற்றி படக்குழு அறிவிக்கவில்லை.