25 ஆண்டுகளுக்கு பின் கம்பேக்... ஜோதிகாவின் உருக்கமான பதிவுக்கு சூர்யா போட்ட வாவ் கமெண்ட்!

25 ஆண்டுகளுக்கு பின் கம்பேக்... ஜோதிகாவின் உருக்கமான பதிவுக்கு சூர்யா போட்ட வாவ் கமெண்ட்!
25 ஆண்டுகளுக்கு பின் கம்பேக்... ஜோதிகாவின் உருக்கமான பதிவுக்கு சூர்யா போட்ட வாவ் கமெண்ட்!

நீண்ட வருடங்கள் கழித்து நடிகை ஜோதிகா இந்தி படம் ஒன்றில் நடித்து வந்த நிலையில், அந்தப் படத்தில் அவர் சம்பந்தப்பட்ட பகுதியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது குறித்து புகைப்படத்துடன் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜோதிகா. அதற்கு நடிகர் சூர்யா தனது கருத்தை தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1998-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘Doli Saja Ke Rakhna’ என்ற படத்தின் மூலம் அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய அவர், சூர்யாவின் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் வாயிலாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின்னர் ‘முகவரி’, ‘குஷி’, ‘தெனாலி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தந்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்ததுடன், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வந்த ஜோதிகா, சூர்யாவுடனான திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தார். எனினும், சில வருடங்களில் ‘36 வயதினிலே’ ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்தவகையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘Kaathal:The Core’ படத்திலும், இந்தியில் கம்பேக் கொடுக்கும் வகையில், ராஜ்குமார் ராவ்-ன் ‘ஸ்ரீ’ என்றப் படத்திலும் நடித்து வந்தார். இதில் ‘ஸ்ரீ’ படத்தில் ஜோதிகா சம்பந்தப்பட்டப் பகுதியின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளநிலையில், படத்தின் குழுவினர்களிடமிருந்து விடைபெறுவது குறித்து புகைப்படத்துடன் சமூகவலைத்தளத்தில் உருக்கமான போஸ்ட் ஒன்றை அவர் பதிவு செய்துள்ளார்.

அதில், “கனத்த இதயத்துடன் ‘ஸ்ரீ’ படத்திற்கான எனதுப் பகுதிகளை முடித்துவிட்டு அவர்களிடம் இருந்து விடைபெறுகிறேன். நான் பணியாற்றிய சிறந்த குழுவினர்களில் ஒரு டீம் தான் இந்தப் பட குழு. இந்த அர்த்தமுள்ள சினிமாவில் என்னை ஒரு பகுதியாக மாற்றியதற்கும், மரியாதை செய்ததற்கும் இயக்குநர் துஷார் மற்றும் தயாரிப்பாளர் நிதி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தின் ஹீரோவான ராஜ்குமார் ராவின் தீவிர ரசிகை நான். பாலிவுட் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களுடன் நடித்து எனது நடிப்பை பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, எனக்குக் கிடைத்த பெருமை. இந்த படத்தின் குழுவினர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு கமெண்ட் பகுதியில் நடிகரும் ஜோதிகாவின் கணவருமான சூர்யா, “இந்த அற்புதமான பயணம் அனைவரின் மனதையும் வெல்லட்டும்” என்று பதிவிட்டுள்ளார். சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஜோதிகா மீண்டும் ‘ஸ்ரீ’ படத்தின் மூலம் இந்தியில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com