\
ஜெயிலர் 2 - ரஜினிகாந்த்
ஜெயிலர் 2 - ரஜினிகாந்த்jailer 2

அதிவேகமாக 400 கோடி வசூலித்து சாதனை.. துரந்தர் 2-ஐ ஓரங்கட்டிய ஜெயிலர் 2!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் 4 நாட்களில் 425 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
Published on: 
Summary

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2, 4 நாட்களில் 425 கோடி வசூலித்து, அதிவேகமாக 400 கோடி வசூலித்த முதல் தமிழ் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. காமெடி மற்றும் ஆக்சன் கலந்த குடும்பப் படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. 2023ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், மோகன்லால், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, ஜாக்கி ஷரஃப், ரித்திக் ரோஷன், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகிபாபு, சுராஜ், நமோநாரயணா உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியான இத்திரைப்படம், நேர்மறையான விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. காமெடி + ஆக்சன் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஜெயிலர் 2, குடும்பமாக பார்த்து மகிழும் வகையில் பழைய ரஜினிபடம் போல உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அது வசூலிலும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. படத்தின் ஓப்பனிங் நாளை விட ஞாயிற்றுகிழமையான நேற்று அதிகப்படியான டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. அது படத்தின் வசூலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளியாகியிருக்கும் தகவலின் படி, நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 4 நாட்களில் 425 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. துரந்தர் 2-ன் முதல்நாள் வெளிநாட்டு கலக்சனை முறியடித்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிவேகமாக 400 கோடி வசூலை ஈட்டிய தமிழ் திரைப்படமாகவும் மாறி வரலாறு படைத்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் 600 கோடியை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் முதல் 1000 கோடி தமிழ்திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் அதை சாத்தியமாக்குமா? என்ற எதிர்ப்பார்ப்பும் எகிறியுள்ளது.

ஜெயிலர் 2 - ரஜினிகாந்த்
நடிகர் டைகர் ஷெராப்பை கொல்ல முயற்சி.. கை, மார்பில் கட்டுடன் வெளியான புகைப்படம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com