
தீவிர அரசியலில் இறங்க தமக்கு நேரம் வந்துவிட்டதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், தாம் ஏற்கனவே திமுகவில் இருப்பதாகவும், சினிமாவிற்கு வரும் முன் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தாகவும் கூறினார். திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், முரசொலிமாறன் ஆகியோருக்காக வாக்கு சேகரித்துள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு, அரசியலில் இருந்து சற்று விலகி இருந்ததாக குறிப்பிட்டார். தற்போது பல நடிகர்கள் அரசியலுக்கு வரும் நிலையில் தானும் தீவிர அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டதாக கருதுவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.