‘ஜானு கேரக்டரே போதும்’ - நடிப்பிலிருந்து ஓய்வு பெறுகிறாரா சமந்தா?

‘ஜானு கேரக்டரே போதும்’ - நடிப்பிலிருந்து ஓய்வு பெறுகிறாரா சமந்தா?

‘ஜானு கேரக்டரே போதும்’ - நடிப்பிலிருந்து ஓய்வு பெறுகிறாரா சமந்தா?
Published on

நடிகை சமந்தா நடிப்பிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘விண்ணைத்தண்டி வருவாயா’ படத்திற்குப் பிறகு, ‘96’ படம் நடிகை த்ரிஷாவின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

இப்போது, அந்தப் படம் 'ஜானு' என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை போலவே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் த்ரிஷாவின் பாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். ஜானு திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் திரைப்படங்களில் நடிப்பதை சமந்தா விட்டுவிட முடிவு செய்துள்ளதாக அவர் அளித்த சமீபத்திய பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

“ஒரு நடிகையின் ஆயுட்காலம் எப்போதும் ஒரு நடிகரின் ஆயுட் காலத்தை விடக் குறைவானது” என்பதை சுட்டிக்காட்டிய சமந்தா, ரசிகர்கள் பெண் நட்சத்திரங்களை சினிமாவை விட்டு வெளியேறிய பின் மறக்க நினைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே, நடிப்பிலிருந்து விலக முடிவு செய்யும் போது, அவரது கடைசி படம் மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் யாரும் அவரை மறக்க மாட்டார்கள் என்றும் முடிவெடுத்த சமந்தா ‘ஜானு’ பாத்திரத்தை தேர்வு செய்து நடித்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய முழுமையான நடிப்பை வெளிப்படுத்திவிட்ட பிறகு, விலக வேண்டிய நேரம் இதுவே என்று சமந்தா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சமந்தாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் என்பது நிச்சயம். ஆனால் இதை இன்னும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com