சரோஜா தேவி
சரோஜா தேவி முகநூல்

சரோஜா தேவி குறித்த சுவாரஸ்ய விஷயங்கள்..!

கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி என நாம் அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி. அவர் சினிமாவிற்குள் வந்தது எப்படி? அவர் வாங்கிய விருதுகள் என்னென்ன? அவர் நடித்த படங்கள் எத்தனை என அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
Published on

சினிமாவிற்குள் எப்படி வந்தார் சரோஜா தேவி

சரோஜா தேவி 1942 ஜனவரி 7 அன்று கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தார். தந்தை பைரப்பா போலீஸ் அதிகாரியாக இருந்தார். இவரது தாயார் ருத்ரம்மா செயின்ட். தெரேசா பள்ளி, சாமராஜ்பேட்டையில் படித்துக் கொண்டிருந்த அவர், தனது 13வது வயதில் பள்ளி விழா ஒன்றில் கலந்துக் கொண்டு பாடல் பாடினார்.. அப்போது ஹொன்னப்பா பகவத்தாரால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டார்.. ஆரம்பத்தில், அவர் திரைப்படங்களில் நடிக்க தனது வாய்ப்பை மறுத்தார். ஆனால் அவரது தாயார் சமாதானம் செய்து அவரை சினிமாவில் நடிக்க வைத்தார்.

சரோஜா தேவி
சரோஜா தேவி முகநூல்
சரோஜா தேவி
காலமானார் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி!

தமிழில் அறிமுகமான படம்

அதன் பிறகு அவர் 1955-56 ஆம் ஆண்டுகளில் கன்னட திரைப்படமான மகாகவியில் காளிதாசவுடன் அறிமுகமானார், இது தேசிய விருதை வென்றது. அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. அதைத் தொடர்ந்து, தமிழில் 1958ம் ஆண்டு எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். அடுத்து இயக்குநர் ஸ்ரீதரின் கல்யாணபரிசு படத்தில் 1959ல் நடித்தார். அடுத்தடுத்து அப்போதைய தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருந்த நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுடன் பிஸியாக நடித்த நடிகையென்றால் அது சரோஜா தேவிதான். எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கனகச்சிதமாக பொருந்த கூடியவர் சரோஜா தேவி. மேலும் தனது திறமை மிக்க நடிப்பால் கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடிப்பவர் அவர்தான் என்று சொல்லும் அளவிற்கு சினிமா உலகில் பெருமை பெற்றிருந்தவர்..

சரோஜா தேவி
சரோஜா தேவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது

உச்ச நட்சத்திரங்களுடன் நடித்த சரோஜா தேவி

சரோஜா தேவி
சரோஜா தேவி முகநூல்

உச்ச நட்சத்திரங்களான சிவாஜி மற்றும் எம்ஜியாருடன் அதிக படங்களில் நடித்த நடிகை இவர். இதில் எம்ஜியாருடன் 26 படங்களிலும், சிவாஜியுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என மொத்தம் 200 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2009-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ படத்தில் நடித்தார். இந்நிலையில் பெங்களூருவில் உடல்நலக்குறைவால் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவருக்கு வயது 87.

திருமண வாழ்க்கை

இந்த சினிமா பயணத்திற்கு இடையில் 1967 ஆம் ஆண்டு ஸ்ரீ ஹர்ஷா என்ற பொறியாளரை மணந்தார். இவர்களுக்கு புவனேஸ்வரி, இந்திரா, கௌதம் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் 1986-ம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைந்த கணவர் ஸ்ரீ ஹர்ஷாவின் நினைவாக மல்லேஸ்வரமின் க்ளூனி கான்வென்ட்டில் ஊனமுற்ற குழந்தைகளுக்கு நன்கொடையாக வகுப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளார்.. இவர் தனது மறைந்த கணவர் ஸ்ரீ ஹர்ஷா, மகள் புவனேஸ்வரி மற்றும் அவரது தாயார் பெயரில் பல நன்கொடை முகாம்களை நடத்தி பலருக்கும் உதவிகளை செய்துள்ளார்.. அறக்கட்டளைகள், மறுவாழ்வு மையங்கள் என அவரது சமூகத்தின் மீதான அக்கறைகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்..

சரோஜாதேவி பெற்ற விருதுகள்

சரோஜா தேவி
சரோஜா தேவி முகநூல்
சரோஜா தேவி
நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார்!

சரோஜாதேவி அவர்கள் இந்திய அரசின் பத்மஸ்ரீ (1969) மற்றும் பத்ம பூஷன் (1992) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், ஆந்திர அரசின் என்.டி.ஆர். விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

நாட்டிய கலாநிதி விருது 2009 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. அத்துடன் தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர். 1997 ஆம் ஆண்டில் 45 வது தேசிய திரைப்பட விழாவில் ஜூரியாக செயல்பட்டார். அதன் பிறகு தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் குழுவிலும் இருந்தார். மேலும் கன்னட திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும், பெங்களூரு, காந்தரேவா ஸ்டுடியோவின் தலைவராகவும் இருந்துள்ளார்.. அவர் இரண்டு முறை தேசிய விருது நடுவர் மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com