கோட்டா சீனிவாசராவ்
கோட்டா சீனிவாசராவ்முகநூல்

நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார்!

பிரபல நடிகர் கோட்டா சீனிவாசராவ் உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர். தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2003ல் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி படத்தில் வில்லனாக அறிமுகமாகி, தமிழகமெங்கும் கவனிக்கப்பட்டவர். மேலும், "திருப்பாச்சி, குத்து, ஏய், கோ, சகுனி" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். இவரது நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு 'சுவர்ண சுந்தரி' என்ற படம் வெளியானது.

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர் கோட்டா சீனிவாச ராவ். 1999 - 2004 ம் ஆண்டு வரை விஜயவாடா தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார்.

இப்படி பல படங்களை நடித்து இவர், கடந்த, 2023ம் ஆண்டுடன் நடிப்பதை நிறுத்திவிட்டார்.. .சமீபத்தில் வயது மற்றும் உடல்நலக் காரணங்களால், நடக்க முடியாமல் அவதிப்பட்ட இவரது போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

கோட்டா சீனிவாசராவ்
’இந்திய சினிமா காணாத கதைக்களம்.. 4 வேடத்தில் அல்லு அர்ஜுன்’ - அட்லீ எடுக்கும் புதிய அவதாரம்!

தனது முக பாவணையாலும் கதாப்பாத்திர அனுகுமுறை காரணமாகவும் தனக்கென தனிரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிய இவர் தற்போது உடல்நலக்குறைவால் தனது 83 வயதில் இவர் காலமாகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இவரது இறப்புக்கு திரைத்துறையினர் , அரசியல் கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com