\
vijay - jason sanjay
vijay - jason sanjayani / video screenshot

‘Phone-அ வச்சிடவா அப்பா..’ சிக்மா படம் பார்த்து அப்பா Call செய்தால்? ஜேசன் சஞ்சய் கலகல பதில்!

நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் சிக்மா நாளை திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.
Published on: 
Summary

சிக்மா படத்தின் ரிலீஸ் முன்னோட்டத்தில், ஜேசன் சஞ்சய் தனது அப்பா விஜய் படம் பார்த்து கால் செய்தால், 'ஃபோன வச்சிடவா அப்பா' என கேட்பேன் என கலகலப்பாக பதிலளித்தார். அவர் படத்தைப் பார்த்து பெருமை படுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

சந்தீப் கிஷன் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிக்மா. முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இந்த திரைப்படம், நாளை அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மீது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

சிக்மா ரிலீஸ்-க்கு முன்பு படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் ஜேசன் சஞ்சய், படம் பார்த்தபிறகு அப்பா கால் செய்தால் என்ன பேசுவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

Jason Sanjay
Jason SanjaySigma

சமீபத்திய நேர்காணலில் கலந்துகொண்ட இயக்குநர் ஜேசன் சஞ்சயிடம், சிக்மா திரைப்படம் ரிலீஸாகிடுச்சு, உங்க அப்பா பார்த்துட்டாங்க. உடனே உங்களுக்கு ஃபோன் பண்ணி உங்க கிட்ட எதுவுமே பேசாம ஒரு 15-20 நொடி அப்படியே இருக்காங்க. நீங்க என்ன பேசுவீங்க? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜேசன், “அவர் பொதுவாகவே அமைதியான நபர் தான். அதனால் ஒரு கேள்வி கேட்டுட்டு அடுத்த கேள்விக்கு நேரம் எடுத்துப்பாரு” என கூறினார்.

சரி அப்படியானால் ஒரு நிமிடம் உங்களிடம் அவர் பேசவில்லை என்ன செய்வீர்கள்? என கேட்க. அதற்கு ‘ஃபோன வச்சிடவா அப்பான்னு சொல்லிடுவன். நீங்க பொறுமையா யோசிச்சுட்டு ஒரு முடிவுக்கு வந்தபிறகு கால் பண்ணுங்கன்னு சொல்லிடுவன்” என கலகலப்பாக பேசினார். அவருக்கு உங்கள் படம் பிடிக்கும் என நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, “கண்டிப்பாக பிடிக்கும், அவர் பெருமை படுவார்” என பதிலளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com