Spider-Man: Brand New Day Trailer Out
Tom Holland, ZendayaSpider-Man: Brand New Day

பீட்டர் பார்க்கரை மறந்த உலகம்.. தேடி வரும் ஆபத்து! | Spider-Man: Brand New Day Trailer

`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் உதவி கேட்கிறார்.
Published on

உலகம் முழுக்க ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட சூப்பர் ஹீரோ ஸ்பைடர்மேன். இந்தப் பாத்திரத்தை மையப்படுத்தி வரும் படங்களுக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கும். தற்போது வெளியாக தயாராகி வரும் ஸ்பைடர்மேன் படம் `Spider-Man: Brand New Day'. மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) Phase Sixல் முதல் படமாக வர இருக்கிறது. தற்போது, இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு வெளியான `Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் உதவி கேட்கிறார். ஆனால், பல குழப்பங்களுக்கு நடுவே டாக்டர் ஸ்ட்ரேஞ் செய்த தவறான மந்திரத்தால், உலகில் உள்ள அனைவரும் பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரையே மறந்துபோகிறார்கள். இந்த சம்பவம் நடந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு `Spider-Man: Brand New Day' கதை துவங்குகிறது. அதன் பின்னரும் ஸ்பைடர்மேனாக நகரத்துக்கு வரும் ஆபத்துகளைத் தடுக்கும் பீட்டருக்கு ஓர் ஆபத்து வருகிறது. அதிலிருந்து எப்படி தப்புகிறார் என்பதே கதை.

Sam Raimi மூன்று பாகங்களாக, Marc Webb இரு பாகங்களாக, Jon Watts மூன்று பாகங்களாக இயக்கிய ஸ்பைடர்மேன், இப்போது இயக்குநர் Destin Daniel Cretton கைகளுக்கு வந்திருக்கிறது. முன்பு Destin இயக்கிய Shang-Chi and the Legend of the Ten Rings மிகப்பெரிய ஹிட். எனவே இந்தப் படத்தின் மேலும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இந்தப் படம், ஜூலை 31 அன்று வெளியாக உள்ளது.

Spider-Man: Brand New Day Trailer Out
இந்த ஸ்பை திரில்லரில் எது நிஜம்.. எது பொய்? - Dhurandhar The Revenge Review | Ranveer Singh

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com