"இதை மட்டும் செய்யாதீர்கள்.." - Theaterகளுக்கு ஜேம்ஸ் கேமரூன் அறிவுறுத்தல் | Avatar: Fire and Ash
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியான படம் `அவதார்'. இப்படத்திற்கு உலகம் முழுக்க மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வெற்றி பெற்றது. இந்தப் படம் வெளியாகும் முன்பே இன்னும் இந்தப் படத்தில் 4 பாகங்கள் உருவாக்க இருக்கிறேன் என அறிவித்தார் கேமரூன். அதன் படி 2022ல் `Avatar: The Way of Water' என்ற பெயரில் அவதாரின் இரண்டாம் பாகம் வெளியானது. இப்போது அவதாரின் மூன்றாவது பாகமாக `Avatar: Fire and Ash' படம் டிசம்பர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த சூழலில் திரையரங்குகளுக்கு ஒரு அறிவுறுத்தலை செய்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
அந்த பதிவில் "அன்புள்ள தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநருக்கு, எனது குழுவும் நானும் Avatar: FIRE AND ASH-ஐ பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக உங்களுக்கு வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். DCP-யுடன் ஒரு ப்ரொஜெக்ஷன் ஸ்பெசிஃபிகேஷன் கோப்பு மற்றும் ஃப்ரேமிங் விளக்கப்படம் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் ஒளி அளவுகள், ஆடியோ உள்ளமைவு, சரியான ஃப்ரேமிங் போன்றவை பற்றிய முக்கியமான தகவல்கள் உள்ளன. தயவுசெய்து அதைப் படித்து, உங்கள் ஒளி மற்றும் ஒலி அமைப்புகள் அளவீடு செய்யப்பட்டு பயன்படுத்தத் தயாராக உள்ளன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நான் தனிப்பட்ட முறையில் இப்படத்தை பொறுப்புடன் மிக்ஸ் செய்திருக்கிறேன். அமைதியான உரையாடல் காட்சிகள் மற்றும் பெரிய அதிரடி காட்சிகள் முழு ஆற்றலுடன், 7.0 என்ற தரத்தில் சரியாக இயங்கும் தயவுசெய்து அதைக் குறைவாக வைக்காதீர்கள்! திரைப்பட பார்வையாளர்கள் Avatar: FIRE AND ASH-ஐ எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் இறுதியான, அதே நேரம் மிக முக்கியமான பங்கு வகிப்பது நீங்கள் தான். உங்கள் அர்ப்பணிப்புக்கு மீண்டும் நன்றி!" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவதாரின் நான்காவது பாகம் 2029 டிசம்பரிலும், ஐந்தாவது பாகம் 2031 டிசம்பரிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

