Money Heist Professor
ProfessorMoney Heist

Professor மீண்டும் வருகிறார்... Money Heist ஆறாவது சீசனா?

மே 10ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் "புரட்சி இன்னும் முடியவில்லை, Money Heist உலகம் தொடர்கிறது..." எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டது.
Published on
Summary

உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ஸ்பானிஷ் வெப் சீரிஸ் ‘மணி ஹைஸ்ட்’ ஐந்தாம் சீசனில் முடிந்தது என அறிவிக்கப்பட்டிருந்தாலும், கொரிய ரீமேக், ‘பெர்லின்’ ஸ்பின்-ஆஃப் போன்ற தொடர்ச்சிகள் மூலம் அதன் பிரபஞ்சம் நீள்கிறது. இப்போது நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட புதிய வீடியோவில் பேராசிரியராக நடித்த ஆல்வாரோ மோர்டே மீண்டும் தோன்ற, ஆறாவது சீசன் வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உலக அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் `Money Heist'. தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பாகி பின்னர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்பானிஷ் சீரிஸான இது வெற்றியடைந்ததால், அதன் அடுத்த சீசன்களை எடுக்க துவங்கியது நெட்ஃபிளிக்ஸ். 2021ல் வெளியான ஐந்தாம் சீசனோடு இந்த சீரிஸ் நிறைவடைந்தது என அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் இந்த தொடர் கொரியா மொழியில் Money Heist: Korea – Joint Economic Area என 2020இல் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. 202ஈல் Money Heistன் பெர்லின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி Money Heist spin-off சீரிஸாக வந்தது `Berlin'. அதன் இரண்டாவது சீசன் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து மே 10ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் "புரட்சி இன்னும் முடியவில்லை, Money Heist உலகம் தொடர்கிறது..." எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டது.

Money Heist Professor
"எங்களுக்கு நல்ல CM கிடைத்துவிட்டார்.." - ஆர் ஜே பாலாஜி

நேற்று நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட வீடியோ மீண்டும் Money Heist பற்றிய பேச்சை கிளப்பியுள்ளது. அதில் "கனவு முடியவில்லை. Money Heist உலகம் தொடர்கிறது..." எனக் கூறி வீடியோ வெளியிட்டது. அதில் ஸ்பெஷல் என்ன என்றால் Money Heistல்  Professor ஆக நடித்த Álvaro Morteம் இந்த Money Heist சீரிஸின் தொடர்ச்சியில் இருக்கிறார் என்பதை சொல்லும்படி அவர் வீடியோவில் தோன்றுவதை காட்டியுள்ளனர். எனவே இது Money Heist சீரிஸின் ஆறாவது சீசனாக இருக்குமோ என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளது.

Money Heist Professor
"என் ஆணவத்தை உடைத்துவிட்டார்கள்.." ரஜினி சொன்ன சம்பவம் | Rajinikanth
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com