83 வயதில் மீண்டும் தந்தையாகும் அமெரிக்க சூப்பர் ஸ்டார்...!

தற்போது எட்டு மாத கர்ப்பமாக இருக்கும் நூர் அல்ஃபல்லா தான், இணையத்தின் டிரெண்டிங் டாப்பிக்.
 Al Pacino-Nooralfallah
Al Pacino-Nooralfallahnooralfallah insta

20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த நடிகர்களுள் அல் பசீனாவோக்கு மிகப்பெரிய இடமுண்டு. ‘Scarface’, ‘Scent of a woman’, ‘The Godfather’, ‘Dog Day Afternoon’, ‘Donnie Brasco’ என அல் பசீனோவின் அட்டகாசமான நடிப்பைச் சொல்ல பல படங்கள் உண்டு. ஆனால் தற்போது வேறொரு விஷயத்துக்காக இணையம் முழுக்க டிரெண்ட் ஆகியிருக்கிறார் இந்த 83 வயது நடிகர்.

Al Pacino
Al Pacino

அல் பசீனோவுக்கு ஏற்கெனவே நடிப்பு பயிற்சியாளர் ஜேன் டரண்டுடன் (Jan Tarrant) 33 வயதில் ஒரு மகள்; முன்னாள் காதலி பெவெர்லி டி' ஏஞ்சலோவுடன் இரட்டையர்கள் என மூன்று வாரிசுகள் இருக்கிறார்கள். இரட்டையர்களில் ஒருவரான ஒலிவியாவின் தோழியான 27 வயது நூர் அல்ஃபல்லாவை 'கொரோனா காலம்' முதல் டேட் செய்து வருகிறார் அல் பசீனோ. தற்போது எட்டு மாத கர்ப்பமாக இருக்கும் நூர் அல்ஃபல்லா தான் இணையத்தின் டிரெண்டிங் டாப்பிக்.

குவைத் அமெரிக்க பெண்ணான நூர் அல்ஃபல்லா ஏற்கெனவே 79 வயதான மைக் ஜேக்கர்; 61 வயதான நிக்கோலஸ் பெர்க்கரன் உள்ளிட்ட பிரபலங்களுடன் 'ரிலேசன்ஷிப்பில்' இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூடுதல் தகவலாக, அல் பசீனோவிற்கும், அவரின் பிள்ளைகளுக்கும் இந்த நான்காவது குழந்தை விஷயத்தில் விருப்பம் இல்லை என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. 'இதற்கு மேல் குழந்தைகள் எல்லாம் வேண்டாம்' என்று அல் பசீனோ சொன்னதாகவும், 'தன்னால் பிள்ளை பெற்றெடுக்க முடியாதென' நூர் அல்ஃபல்லா சொன்னதாகவும் அல் பசீனோவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் செய்திகளை கசிய விடுகிறார்கள். தனக்கிருக்கும் தைராய்டு பிரச்னைகளால் குழந்தை பெற்றெடுக்க முடியாதென நூர் சொன்னதாகவும், 11 வாரங்கள் வரை தான் கர்ப்பமாக இருப்பது பற்றி அல் பசீனாவிடம் நூர் சொல்லவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

 Al Pacino-Nooralfallah
தோனி பரிசளித்த அந்த ஸ்பெஷல் பேட் - நடிகர் யோகி பாபு போட்ட பதிவின் பின்னணி இதுதான்!

இதனால், 'என்னடா இது அல் பசீனோவுக்கு வந்த சோதனை ' என நொந்து கொள்கிறார்கள் அல் பசீனோ ரசிகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com