Avengers: Endgame ரீ ரிலீஸ்.. இணைக்கப்பட்டுள்ள புது விஷயங்கள் என்ன? | Avengers: Endgame Encore
மார்வெல் சினிமா பயணத்தில் மறக்க முடியாத ஒரு படம் 2019-இல் வெளியான Avengers: Endgame. Marvel Cinematic Universe-ன் Infinity Saga-வுக்கு உணர்ச்சிகரமான முடிவை கொடுத்ததோடு, உலகம் முழுவதும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தையும் கொடுத்தது. இப்போது Avengers: Doomsday வெளியீட்டுக்கு முன்பாக, Avengers: Endgame தந்த அந்த பிரம்மாண்ட அனுபவத்தை, மீண்டும் திரையரங்குகளில் கொண்டுவருகிறது Marvel Studios. ஆனால், இந்த முறை இது சாதாரண Re-release அல்ல ‘Avengers: Endgame Encore’ என்ற புதிய வடிவில் வெளியாகிறது.
Avengers: Endgameல் சேர்க்கப்பட்டுள்ள ‘Encore’ என்பது ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு நிகழ்ச்சியை மீண்டும் ரசிகர்களுக்காக நடத்துவது என்ற பொருளைக் கொண்டது. அதேபோல், Avengers: Endgame மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது. ஆனால் பழைய பதிப்பை அப்படியே திரையிடாமல், சில புதிய காட்சிகள் மற்றும் புதிய அறிமுகத்துடன் இந்த Encore பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பதிப்பின் மொத்த runtime சுமார் 3 மணி நேரம் 5 நிமிடங்கள். அசல் Endgame 3 மணி நேரம் 1 நிமிடம் ஓடிய நிலையில், Encore பதிப்பில் சுமார் 4 நிமிடங்கள் கூடுதலாக இடம்பெறுகின்றன.
இந்த Endgame Encore-ல் முக்கியமாக மூன்று விஷயங்கள் ரசிகர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளன. முதலாவது, புதிய Introduction. திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு Marvel Studiosவுக்கான ஒரு புதிய அறிமுகப் பகுதி இடம்பெற உள்ளது. அது பற்றிய மற்ற தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இரண்டாவது Additional Footage. 2019-ல் வெளியான Avengers: Endgame படத்தில் இடம்பெறாத கூடுதல் காட்சிகள், இந்த Encoreல் சேர்க்கப்பட்டுள்ளன. இவை குறிப்பாக அடுத்த Avengers திரைப்படமான Avengers: Doomsday உடன் தொடர்பை உருவாக்கும் வகையில் இருக்குமாம்.
மூன்றாவது New Post-Credits End Tag. படத்தின் முடிவில் இடம்பெறும் புதிய காட்சி, Endgame கதையிலிருந்து Doomsday நோக்கி ரசிகர்களை அழைத்துச் செல்லும் ஒரு முக்கியமான இணைப்பாக இருக்கப் போகிறது.
Avengers Endgame: Encoreன் மற்றொரு மிகப்பெரிய attraction, Avengers: Doomsday பற்றிய பிரத்யேக Sneak Peek. குறிப்பாக IMAX மற்றும் INFINITY VISION-certified திரைகளில் Doomsday தொடர்பான கூடுதல் preview கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் Endgame-ஐ ஏற்கெனவே பலமுறை பார்த்த ரசிகர்களுக்கும் Encore மீண்டும் திரையரங்கிற்கு செல்ல ஒரு காரணம் கிடைத்துள்ளது.
Endgame என்பது ஒரு சாதாரண superhero திரைப்படம் மட்டுமல்ல. Tony Stark-ன் இறுதி தியாகம், Natasha Romanoff-ன் sacrifice, Steve Rogers தனது shield-ஐ Sam Wilson-க்கு வழங்குவது, Avengers அனைவரும் ஒன்றாக இணையும் அந்த இறுதி போர்க்களம் என ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த பல தருணங்களைக் கொண்ட திரைப்படம். அதனால், ‘Avengers: Endgame Encore’ என்பது ஒரு Re-Release மட்டும் அல்ல; ஒருபுறம் பழைய Avengers-ஐ மீண்டும் பார்க்கும் nostalgia; மறுபுறம் Avengers: Doomsday பற்றிய புதிய தகவல்களுக்கான எதிர்பார்ப்பு இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் Encore உருவாகியுள்ளது. இதோடு சேர்த்து ரசிகர்கள் மட்டும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் Avengers: Endgame படத்தில் Tony Stark பாத்திரத்துக்கு விஜய் சேதுபதிதான் தமிழ் டப் செய்திருந்தார். அவரது குரல்தான் இந்த Avengers: Endgame Encoreலும் இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

