நெட்ப்ளிக்ஸ் மீது ரூ.800 கோடி கேட்டு வழக்கு.. ஹாலிவுட் தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர், நிக்கோலஸ் கேஜ் நடித்த ‘ஃபோர்டிட்யூட்’ படத்தின் மாஸ்டர் ஹார்டு டிரைவ் நெட்ப்ளிக்ஸ் அலுவலகத்தில் இருந்து திருடப்பட்டதாக குற்றம்சாட்டி, 800 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். பாதுகாப்பு குறைபாடால் படம் காணாமல் போனதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று நெட்ப்ளிக்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளது; இதனால் சர்வதேச அளவில் பரபரப்பு எழுந்துள்ளது.
பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் மீது 800 கோடி ரூபாய் இழப்பீடு கோரி ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஹாலிவுட்டில் உள்ள நெட்ப்ளிக்ஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிக்கோலஸ் கேஜ் நடித்த ஃபோர்டிட்யூட் (FORTITUDE) திரைப்படத்தின் மாஸ்டர் ஹார்டு- டிரைவ் (HARD DRIVE) திருடுபோனதாக தயாரிப்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
உரிய பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ளாமல் அளிக்கப்பட்ட படம் காணாமல் போனதற்கு பொறுப்பேற்க முடியாது என்று நெட்ப்ளிக்ஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

