\
aakasamlo oka tara
aakasamlo oka taraaakasamlo oka tara / Dulquer Salmaan

மீண்டும் மீண்டும் HIT படங்கள்.. தெலுங்கு சினிமாவில் துல்கரின் சாதனை!

அடுத்தடுத்து தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்துவரும் துல்கர் சல்மான் மலையாளத்தை கடந்து தெலுங்கு சினிமாவிலும் ஒரு மேஜிக்கையே நிகழ்த்திவருகிறார்.
Published on: 
Summary

துல்கர் சல்மான் தெலுங்கு சினிமாவில் 'மகாநடி', 'சீதா ராமம்', 'லக்கி பாஸ்கர்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களங்களை தேர்வு செய்தது அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார். மலையாள சினிமா தாண்டி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். குறிப்பாக, தெலுங்கு ரசிகர்களை கவரும் வகையில் அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களும், அடுத்தடுத்த வெற்றிப் படங்களும் அவரை டோலிவுட்டில் கவனிக்கப்படும் நடிகராக மாற்றியுள்ளன.

துல்கர் சல்மானின் தெலுங்கு சினிமா பயணம் 2018-ம் ஆண்டு வெளியான 'மகாநடி' திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த இந்தப் படத்தில், பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனாக துல்கர் நடித்திருந்தார். இது அவருக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.

mahanati
mahanatidulquer salmaan

இதையடுத்து, 2022-ம் ஆண்டு ஹனு ராகவபுடி இயக்கத்தில் வெளியான 'சீதா ராமம்' திரைப்படம் துல்கர் சல்மானின் தெலுங்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மிருணாள் தாக்கூர் ஜோடியாக நடித்திருந்த இப்படத்தில், லெப்டினன்ட் ராம் என்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். காதல், எமோஷன், அழகான திரைக்கதை என அனைத்தும் இணைந்த இப்படம் மொழிகளைக் கடந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

sita ramam
sita ramamdulquer salmaan

தொடர்ந்து, 2024-ம் ஆண்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் அவருக்கு மற்றுமொரு வெற்றியைத் தேடித்தந்தது. வங்கி ஊழியராக இருந்து நிதி மோசடியில் ஈடுபடும் சூழலுக்குள் செல்லும் பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் துல்கர் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் துல்கரின் நடிப்பு ஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. இப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி 'மகாநடி', 'சீதா ராமம்', 'லக்கி பாஸ்கர்' என அவர் நடித்த மூன்று முக்கிய தெலுங்குப் படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தது அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Lucky Baskhar
Lucky Baskhardulquer salmaan
aakasamlo oka tara
'அயன்' படத்தின் பெயருக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா? கே.வி. ஆனந்த் சொன்ன விஷயம்

இதற்கிடையே, நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 AD' படத்திலும் கேப்டன் என்ற கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவுடனான தனது தொடர்பையும் மேலும் வலுப்படுத்தினார்.

இந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த கட்டமாக பவன் சாதினேனி இயக்கத்தில் துல்கர் நடித்துள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா' திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி வெளியாகினது. ஸ்ருதி ஹாசன் மற்றும் அறிமுக நடிகை சாத்விகா வீரவள்ளி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் தெலுங்கு மட்டுமல்லாது, பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கில் மூன்று படங்களின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள துல்கருக்கு இந்தப் படமும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. ஒரு மலையாள நடிகராக தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, அடுத்தடுத்த படங்களின் மூலம் அங்குள்ள ரசிகர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் துல்கர் சல்மானுக்கு, வலுவான கதைகளும் அழுத்தமான கதாபாத்திரங்களுமே வெற்றிக்கான முக்கிய அடையாளமாக மாறியுள்ளன.

aakasamlo oka tara
‘ராமாயணா பார்ட் 1’ ஒரு அஜெண்டா படம்.. சாபம் வாங்கிய ராவணன் நல்லவனா? எழுந்த விமர்சனம்!