ஹாரிஷ் ஜெயராஜ்
ஹாரிஷ் ஜெயராஜ்pt

AI -யில் மறைந்த பாடகர் குரல்? .. கேள்விக்கு நச் பதிலளித்த ஹாரிஷ் ஜெயராஜ்!

சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், Ai யில் மறைந்த பாடகர்கள் குரல் பாடப்படுவது குறித்து ஹாரிஷ் ஜெயராஜிடத்தில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் என்ன? பார்க்கலாம்.
Published on

90 ஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமான பாடகர்களின் பட்டியலில் நிச்சயம் இடம்பிடித்திருப்பார் ஹாரிஸ் ஜெயராஜ். தற்போது அவரது பாடல்களை அதிகளவில் திரைப்படங்களில் கேட்க முடியவில்லை என்றாலும், 2000களில் அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும், பலரின் செல்போனில் ரிங்டோனாகவே இருந்தது.

இப்படியான சூழலில், சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், Ai யில் மறைந்த பாடகர்கள் குரல் பாடப்படுவது குறித்து ஹாரிஷ் ஜெயராஜிடத்தில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் என்ன? பார்க்கலாம்.

ஹாரிஷ் ஜெயராஜ்
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் பட பிரபல இயக்குநர் காலமானார்!

” Ai இதுவரை நான் பயன்படுத்தியது இல்லை. எனவே, அதை பற்றி எனக்கு தெரியவில்லை. வருங்காலத்திலும் நான் AI-ஐ பயன்படுத்த மாட்டேன். பாடகர்கள் ஏராளமாக இருக்கும்போது ஏஐ எதற்கு?..” என்றார்.

இதனையடுத்து, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்து போன பாடகர்களின் குரலை கொண்டு வருகிறார்கள். நீங்கள் அப்படி என்ன பாடகரை கொண்டுவர விரும்புகிறீர்கள்? என பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு,

” உயிருடன் இருக்கும் பாடகர்கள்தான் எனக்கு பிடித்த பாடகர்கள்.

எத்தனையோ பேர் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள். இறந்துப்போன பாடகர்கள் எல்லாம் ஏற்கனவே புகழ்பெற்று வாழ்ந்து முடித்தவர்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு வேண்டுமானால் வாய்ப்பு கொடுங்களேன். அவர்கள் சந்தோஷப்படுவார்களே . இருக்கிறவர்களை கொண்டாடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com