எஸ்.எஸ்.ஸ்டான்லி
எஸ்.எஸ்.ஸ்டான்லிமுகநூல்

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் பட பிரபல இயக்குநர் காலமானார்!

இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக்குறைவால் காலமானார். இவரது இறப்புக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
Published on

கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் - சினேகா நடிப்பில் வெளியான ‘ ஏப்ரல் மாதத்தில் ‘ திரைப்படம்தான் எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம். இதன்பிறகு இவர் இயக்கியது தனுஷ் நடிப்பில் வெளியான 'புதுக்கோட்டையில் இருந்து சரவணன்' திரைப்படம். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து, மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல படங்களையும் இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமல்லாது நடிகராக திரைத்துறையில் தடம் பதிக்க நினைத்த இவர் ’பெரியார்’ திரைப்படத்தில் ’அறிஞர் அண்ணா’ வின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். விக்ரமின் ராவணன், விஜயின் சர்கார், பொம்மை நாயகி, மகாராஜா உள்ளிட படங்களிலும் நடித்திருக்கிறார்.

 எஸ்.எஸ்.ஸ்டான்லி
போக்சோ வழக்கில் சிக்கும் அப்பாவிகள்.. OTT-ல் கவனம் ஈர்க்கும் ’COURT: STATE Vs A NOBODY’ திரைப்படம்!

இப்படி திரைத்துறையில் இயக்குநர், நடிகர் என்ற இருபரிணாமத்திலும் தனது முழு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தநிலையில்தான், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் இன்று காலையில் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது (வயது 58) . இவரது இறப்பிறகு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை வளசரவாக்கம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com