டிகாப்ரியோவை முந்திய விஜய்.. உலக அளவில் மூன்றாவது இடத்தில் ’லியோ’ வசூல்!

விஜய்யின் லியோ திரைப்படம் உலகளாவிய வசூலில் ஹாலிவுட் நடிகர் டிகப்ரியோவின் திரைப்படத்தை மிஞ்சியுள்ளது.
vijay
vijayleo

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வசூலிலும் தொடர் சாதனைகளை மேற்கொண்டு வருகிறது.

படம் வெளியாகும் நாளில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தாலும், படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் வசூலை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காம்ஸ் ஸ்கோர் வெளியிட்டுள்ள தகவலின் படி, முதல் நான்கு நாட்களில் உலகளவில் லியோ ரூ.243.96 கோடிகளை வசூலித்துள்ளது.

LEO
LEOpt desk

அமெரிக்காவில் லியோ திரைப்படம் பிரதியங்கரா சினிமாஸ் (Prathyangira Cinemas) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. வார இறுதியில் இத்திரைப்படம் அமெரிக்காவில் 2.1 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் அஹிம்ஸா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அங்கு முதல் மூன்று நாளில் 1.07 மில்லியன் பவுண்ட்களை வசூலித்துள்ளது.

காம்ஸ்கோர் (Comscore) மதிப்பீடுகளின் படி வார இறுதியில் லியோ திரைப்படம், உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் அடிப்படையில் 31.2 மில்லியன் டாலர்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளையில் படம் வெளியாகி 4 நாட்களான நிலையில் உலகளவில் 48.5 மில்லியன் டாலர்களை லியோ வசூலித்துள்ளது. இது டிகாப்ரியோ நடிப்பில் வெளியான Killers of the Flower Moon திரைப்படத்தின் வசூலை விட அதிகம்.

அக்டோப்ர் 20 ஆம் தேதி வெளியான Killers of the Flower Moon திரைப்படம் அக்டோபர் 22 ஆம் தேதி நிலவரப்படி அமெரிக்கா மற்றும் கனடாவில் 23 மில்லியன் டாலர்களையும் மற்ற நாடுகளில் 21 மில்லியன் டாலர்களையும் வசூலித்துள்ளது. மொத்தமாக 44 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது லியோ திரைப்படம். அதே சமயத்தில் Killers of the Flower Moon இந்தியாவில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com