\
இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்
Published on: 

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. 

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பிறகு ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தொடங்கியது. ஆனால் தலைப்பை அறிவித்து படப்பிடிப்பை தொடங்கிய படக்குழுவினர், படத்திற்கான முதல் பார்வையை இதுவரை வெளியிடவில்லை.  இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர்.

அத்துடன் பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடம் வலிமை அப்டேட் கேட்டு வைரல் ஆக்கினார். அதேபோல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டியிலும், கால்பந்து போட்டிகளிலும் அப்டேட் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர் வெளியாகிறது.  இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

- செந்தில்ராஜா

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com