’ஸீரோ’ படப்பிடிப்பில் தீ விபத்து: உயிர் தப்பினார் ஷாரூக் கான்!

’ஸீரோ’ படப்பிடிப்பில் தீ விபத்து: உயிர் தப்பினார் ஷாரூக் கான்!

’ஸீரோ’ படப்பிடிப்பில் தீ விபத்து: உயிர் தப்பினார் ஷாரூக் கான்!
Published on

‘ஸீரோ’ பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் நடிகர் ஷாரூக் கான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  

இந்தி நடிகர் ஷாரூக் கான், இப்போது ஸீரோ என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் அவர் குள்ள உருவம் கொண்டவராக நடிக்கிறார். அவர் ஜோடியாக, அனுஷ்கா சர்மா, கேத்ரினா கைஃப் நடிக்கின்றனர். மற்றும் சல்மான் கான், மாதவன், ராணி முகர்ஜி உட்பட பல முன்னணி நடிகர்கள் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்தப் படம் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மும்பை கோரேகான் திரைப்பட நகரில் நடந்து வந்தது. நேற்று படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நடிகர் ஷாருக்கான் நடித்துக்கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை போராடி அணைத்தனர்.


இருப்பினும் படப்பிடிப்புக்கான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com