“லியோ 'LCU'வா? எந்த ஸ்பாய்லர்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்” - லோகேஷ் கனகராஜ் ஷேரிங்க்ஸ்!

தமிழ்நாடு முழுவதும் லியோ திரைப்படம் இன்று காலை 9 மணி அளவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தனது x வலைதளப்பக்கத்தில் நடிகர் விஜய், படக்குழுவினர் என்று அனைவருக்கும் தனது நன்றியை நேற்று இரவு தெரிவித்துள்ளார்.
 'லியோ'
'லியோ'முகநூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இன்று வெளியாகிறது லியோ படம். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ளது படம்.

எப்படியாவது முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆரவாரங்களுக்கு மத்தியில் இருந்த ரசிகர்கள், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில மணி நேரத்திலேயே அடித்து பிடித்து கொண்டு அதனை வாங்கும் காட்சிகள் ஒரு புறமும், கிடைக்கவில்லையே என்று சோகத்தில் மூழ்கிய பார்வையாளர்கள் மற்றொரு புறமும்... என்றிருக்க ஒருவழியாக தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 9 மணி மணிக்கு லியோ திரைப்படத்தின் FDFS காட்சிகளானது திரையிடப்பட இருக்கிறது.

 'லியோ'
நாளை ’லியோ’ ரிலீஸ்.. சென்னை ரோகிணியில் டிக்கெட்டுக்காகக் குவிந்த ரசிகர்கள்.. போலீஸ் தடியடி!

கேரளா, கர்நாடகாவை பொறுத்த வரை அதிகாலை 4 மணிக்கும், புதுச்சேரியில் அதிகாலை 7 மணி காட்சிகளுக்கும் அனுமதியானது கிடைத்திருக்கிறது.

பல தடைகளையும் தாண்டி தற்போது படம் வெளியாக இருப்பதால், லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று தனது x வலைதளப்பக்கத்தில் நடிகர் விஜய், படக்குழு உறுப்பினர்கள் என்று அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மேலும் “இந்தப் படம் 'LCU'-ன் கீழ் வருகிறதா இல்லையா என்ற உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இன்னும் சில மணி நேரத்தில் பதில் கிடைக்க போகிறது” என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில் அவர் கூறுகையில்,

“வாழ்த்துக்கள்,

படம் ரிலீஸுக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், இந்த தருணம் உணர்ச்சிகரமானதாகவும், கனவுபோலவும் இருக்கிறது. எனது இலக்கை முன்னோக்கி கொண்டு செல்ல என் அன்பான விஜய் அண்ணன் எனக்காக எல்லாவற்றையும் கொடுத்ததற்கு நன்றி. எங்கள் அனைவருக்கும் நீங்கள் காட்டிய அளப்பரிய அர்ப்பணிப்புக்காக நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த படத்திற்காக பலரும் தங்களின் ரத்தத்தையும் வியர்வையும் செலுத்தி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். 'லியோ' படத்தின் வேலைகளை ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.

லியோ ஆடியோ லான்ச்
லியோ ஆடியோ லான்ச்முகநூல்

ரசிகர்களாகிய உங்களுக்கு இப்படத்தை வழங்க இரவு பகலாக தொடர்ந்து உழைத்து வந்தோம். இந்த படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அற்புதமான நடிகர்கள் மற்றும் படக்குழுவினரிடமிருந்து பல விஷயங்களையும் கற்றுக்கொண்டேன்.

 'லியோ'
"விக்ரம் படம் மாதிரிதான் இந்த Leo-வும் இருக்கும்" - லோகேஷ் கனகராஜ் ஷேரிங்க்ஸ்!

என் அன்பான பார்வையாளர்களுக்கு நான் தெரிவிப்பது, நீங்கள் என்மேல் பொழிந்த அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. 'லியோ' இன்னும் சில மணி நேரத்தில் உங்களுடையதாக மாறப்போகிறது. உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை இத்திரைப்படம் நிச்சயம் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு புதுவிதமான அனுபவத்தை நாங்கள் தரவேண்டும் என்று விரும்புவதால் படத்தின் எந்த ஸ்பாய்லர்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். :)

 'லியோ'
“விஜய் படம் என்றாலே பிரச்னை வந்துவிடுகிறது” - செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

மேலும் இந்தப் படம் 'LCU'-ன் கீழ் வருகிறதா இல்லையா என்ற உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இன்னும் சில மணி நேரத்தில் பதில் கிடைக்கப்போகிறது” என்று தன் பதிவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com