சொல்வதற்கு காத்திருக்கும் கடந்த காலத்தின் “fiery story"! - தங்கலான் டீசர், ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது.
தங்கலான்
தங்கலான்twitter

இயக்குநர் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து முதலிய ஸ்டார் நடிகர்கள் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ”தங்கலான்”. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், கர்நாடகாவில் உள்ள கோலர் தங்க சுரங்கத்தில் வேலைப் பார்த்த தமிழர்கள் பட்ட துயரத்தின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தங்கலான்
தங்கலான்

தன்னுடைய 61வது படமான தங்கலானிற்காக நடிகர் விக்ரம் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டு நடித்துள்ளார். ஆஸ்கர் விருதுவென்ற ‘The Pianist’, ‘The Beach’, ‘Lara Croft Tomb Raider: The Cradle of Life’ உள்ளிட்டப் படங்களில் நடித்திருந்த ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்ட்டாகிரோன் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

டேனியல் கால்ட்டாகிரோன்
டேனியல் கால்ட்டாகிரோன்

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதியும், பட ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சொல்லப்படுவதற்கும் போற்றப்படுவதற்கும் காத்திருக்கும் நெருப்பு கதை!

தங்கலான் படத்தின் முக்கிய அப்டேட்டை தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் விக்ரம் வெளியிட்டுள்ளார்.

விக்ரம் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “சொல்லப்படுவதற்கும் போற்றப்படுவதற்கும் கடந்த காலத்தின் நெருப்பு கதை காத்திருக்கிறது. தங்கலான் படத்தின் டீசர் நவம்பர் 1ஆம் தேதி வெளியாகிறது. படம் அடுத்தவருடம் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது” என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com