பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ.. கேட்கும் போதே கண் கலங்குதே! இப்படி ஒரு கதையா?
நடிகை லதா ராவ் தனது கேப் டிரைவரின் உருக்கமான அனுபவத்தை பகிர்ந்த வீடியோ தீபாவளி பண்டிகையின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை வெளிப்படுத்துகிறது. அவரது மனைவி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்போர்ட்டுடன் இருப்பதை அறிந்த லதா, உதவிக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் - M.மீரா
தில்லாலங்கடி, தர்ம பிரபு, நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களிலும், சூழல் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருப்பவர் நடிகை லதா ராவ். சினிமா மட்டுமின்றி, சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு விமான நிலையங்களில் பீரியட்ஸ் நாப்கின் வாங்குவதற்கான வசதி இல்லை என்று பதிவிட்டு வீடியோ வைரலானது. பின்னர் அந்த வீடியோவின் எதிரொலியான் விமான நிலையத்தில் நாப்கின் வசதிகள் உருவாக்கப்பட்டன. அதற்கான நடிகை லதா ராவுக்கு சமூகவலைதளங்களில் நிறைய பாராட்டுகளும் குவிந்தன.
இந்நிலையில், நடிகை லதா ராவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் சந்தித்த கேப் டிரைவர் (Cab Driver) ஒருவரைப் பற்றி வெளியிட்ட உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகப் பரவி வருகிறது.
தீபாவளி பண்டிகை சமயத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு நெகிழ்ச்சியான மற்றும் கண்கள் கலங்க வைக்கும் அனுபவத்தை அவர் இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
தீபாவளி பண்டிகையின் போது லதா ராவ் ஒரு கேப் (Cab) புக் செய்து பயணம் செய்துள்ளார். அந்தப் பயணத்தின் போது, அந்த கேப் டிரைவர் (Cab Driver) இவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு தனது மனைவியிடம் வீடியோ காலில் பேசுவதற்காக வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பேசியிருக்கிறார். இவர் பேசிக்கொண்டே இருக்க மறுமுனையில் இருப்பவர் எதுவும் பேசாமல் இருக்கவே அதுவரையில் கேப் டிரைவரின் போன் திரையை பார்க்காமல் இருந்த லதா ராவ் திரையை பார்த்திருக்கிறார். அப்போதுதான் மருத்துவமனையில் இருக்கும் தனது மனைவியிடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவரின் மனைவி ஆக்ஸிஜன் சப்போர்ட்டுடன் மருத்துவனையில் படுத்திருந்தார்.
என்ன ஆயிற்று என்று லதா ராவ் கேப் டிரைவரிடம் கேட்ட போது குழந்தை பேறின் போது நடந்த ஒரு தவறான சிகிச்சையின் காரணமாக அவர் இந்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அவருக்கு சரியாக நினைவு திரும்ப அடிக்கடி பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஏதாவது உதவி வேண்டுமா என்று லதா ராவ் கேட்ட போது, எனக்காக பரிதாபம் படவேண்டிய அவசியமில்லை, நான் என் மனைவிக்கு தான் செய்கிறேன் என்று கூறிய அவர், உங்கள் பிரார்த்தனையில் என்னை நினைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அந்த கேப் ட்ரைவருக்கு 28 வயதுதான் என்பது இன்னும் அதிர்ச்சியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கும் வகையில் மிகவும் உருக்கமாக அமைந்த இந்த வீடியோவை செய்தி ஊடகங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

