\
Latha Rao
Latha RaoLatha Rao Instagram

விமான நிலையத்தில் பீரியட்ஸ்.. நடிகை-க்கு நடந்த மோசமான சம்பவம்.. முக்கியமான வீடியோ வைரல்!

தனக்கு விமான நிலையத்தில் நடந்த மோசமான அனுபவத்தை சீரியல் நடிகை லதா ராவ், சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Published on
Summary

திரைப்பட, டிவி நடிகை லதா ராவ், சென்னையிலிருந்து ஐதராபாத் செல்ல விமான நிலையம் வந்தபோது திடீரென மாதவிடாய் ஏற்பட்ட அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்துள்ளார். சானிட்டரி நாப்கின் வசதி விமான நிலையத்தில் இல்லாததால் அவதியுற்றதாக கூறிய அவர், இறுதியில் கேட் 7 அருகிலுள்ள மருந்தகத்தில் வாங்கியதாகவும், பெண்கள் பயணிக்கும் முன் பையில் நாப்கின் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

தில்லாலங்கடி, தர்ம பிரபு, நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களிலும், சூழல் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருப்பவர் நடிகை லதா ராவ். சினிமா மட்டுமின்றி, சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை லதா ராவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனக்கு விமான நிலையத்தில் நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதாவது, சென்னையில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக, விமான நிலையத்திற்கு லதா ராவ் சென்றுள்ளார்.

Chennai Airport
Chennai AirportANI

அப்போது அவருக்கு திடீரென மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. ஆனால், தனது பையில் சானிட்டரி நாப்கின் பேட்கள் இல்லாததால், அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும், விமான நிலையத்தில் பணத்தை செலுத்தி, நாப்கின் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து, அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.

இதற்கு, அப்படியான வசதிகள் எதுவும் இல்லை என்று, அதிகாரிகள் கூறியதால், அதிர்ச்சி அடைந்த நடிகை, என்ன செய்வதென்று தெரியாமல், விமான நிலையத்தில் பரிதவித்துள்ளார். இறுதியில், கேட் எண் 7-க்கு அருகில் மருந்தகம் ஒன்று இருப்பதையும், அங்கு சானிட்டரி நாப்கின் விற்கப்படும் என்பதையும் ஒருவர் கூறியுள்ளார்.

Latha Rao
Latha Rao Latha Rao Instagram

இதற்கிடையே, தனது பயணத்திற்கான அறிவிப்பும் தொடங்கியுள்ளது. இதையடுத்து, கேட் ஒன்றில் இருந்து 7-க்கு பதறியடித்து சென்ற அவர், நாப்கினை வாங்கிக் கொண்டு, திரும்பி வந்துள்ளார். இதுதொடர்பான தகவலை வீடியோவில் பகிர்ந்திருந்த லதா ராவ், மாதவிடாய் பற்றிய விஷயங்களை சமூக வலைதளங்களில் பேசுவது கேவலமானதோ, சங்கடமானதோ கிடையாது என்று தெரிவித்தார்.

மேலும், பயணங்கள் மேற்கொள்வதற்கு முன்பு, கேஸ் ஸ்டவ்வை அணைத்துவிட்டோமா, வீட்டின் சாவியை எடுத்துக் கொண்டோமா என்று யோசிக்கும் பெண்கள், பையில் ஒரு சானிட்டரி நாப்கினை எடுத்துக் கொண்டோமா என்பதை நினைவில் வையுங்கள். அது உங்களுக்கு பயன்படவில்லை என்றாலும், வேறு ஒருவருக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்று கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், 300-க்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களையும் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், லதா ராவின் இந்த வீடியோவை பாராட்டி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com