“வதந்தியை பற்றி கவலையில்லை; ஆனா இது கேவலமான செயல்” - வைரலான புகைப்படம் குறித்து சாய்பல்லவி வேதனை!

திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வெளியான நிலையில் சாய்பல்லவி அதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.
sai pallavi
sai pallavipt web

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னனி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சாய்பல்லவி. பல வெற்றிப்படங்களில் நடித்தவர்.

சாய்பல்லவி அடுத்ததாக சிவகார்த்திகேயனின் 21 ஆவது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

இத்திரைப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது. இதில் ராஜ்குமார் பெரியசாமி அருகில் சாய்பல்லவி நின்றிருந்த புகைப்படம் வெளியானது. இருவரும் கழுத்தில் மாலையுடன் இருந்ததால் இணையத்தில் சிலர் இருவருக்கும் திருமணம் என பதிவிட்டு வந்தனர். பார்த்ததும் ஏதோ திரைப்படத்தின் பூஜையில் எடுத்த புகைப்படம் என சொல்லிவிடலாம். ஆனாலுல் சாய்பல்லவிக்கு திருமணம் என பதிவிட்டதால் இச்செய்தி வேகமாக பரவியது.

இந்நிலையில் சாய்பல்லவி இதற்கான விளக்கத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், “வதந்திகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை, ஆனால், குடும்பத்தினரை போன்று இருக்கும் நண்பர்களைக் குறித்து அந்த வதந்திகள் இருக்கும்போது அதைப் பற்றி நான் பேச வேண்டியிருக்கிறது. எனது படத்தின் பூஜை விழாவில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை உள்நோக்கத்தோடு க்ராப் செய்து அநாகரிகமான நோக்கத்திற்காக பணத்தை பெற்றுக் கொண்டு பரப்பியிருக்கிறார்கள்.

எனது படம் குறித்த மகிழ்ச்சியான அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் தருணத்தில், இதுபோன்ற வேலையற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வருத்தமளிக்கிறது. அசௌகரியத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்கள் முற்றிலும் கேவலமானது!” என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com