“இந்தா வந்துட்டா இல்ல.. என் ஹார்ட்ட கொத்தா எடுத்துட்டு போக..” - ’தலைவர் 170’-ல் இணைந்த ‘மாரியம்மா’!

நடிகர் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’வது படத்தில் இணைந்துள்ளார் தமிழ் சினிமா ரசிகர்களின் ‘மாரியம்மா’. இதுகுறித்த தகவலை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
dushara vijayan
dushara vijayanfile image

‘ஜெயிலர்’ கொடுத்த வெற்றியை தொடர்ந்து ‘தலைவர் 170’ எனும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். உண்மை சம்பவத்தை வைத்து ‘ஜெய் பீம்’ என்ற படைப்பை கொடுத்து அத்தனை பேரையும் திரும்பி பார்க்க வைத்த ஞானவேல், ‘தலைவர் 170’ படத்தை இயக்குகிறார்.

படப்பிடிப்பு பணிகள் இம்மாத துவக்கத்தில் தொடங்கும் என்று தெரிகிறது. இந்நிலையில், படக்குழு குறித்த அறிவிப்புகள் நேற்று முதல் பட்டாசாக வெடித்து வருகின்றன. இசையமைப்பாளராக அனிருத், இயக்குநராக ஞானவேல், தயாரிப்பாளராக சுபாஷ்கரன் என்று அறிவிப்புகள் நேற்று வெளியாகின. அதனைத் தொடர்ந்து, படத்தின் நடிகை குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.

எந்த படத்தில் நடித்தாலும் தனது, வசன உச்சரிப்பில் கவனத்தை ஈர்த்து வரும் நடிகையும், இளைஞர்களின் ஆதர்ச நாயகியாகவும் இருக்கும் நடிகை துஷாரா விஜயன் படத்தில் இணைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக, ‘சார்ப்பட்டா பரம்பரை’யில் மாரியம்மாவாக கலக்கியிருந்தார் துஷாரா.

இந்த நிலையில், ‘தலைவர் 170’ல் துஷாரா நடிக்கிறார் என்ற தகவலை கேட்ட ரசிகர்கள், “இந்தா வந்துட்டா இல்ல.. என் ஹார்ட்ட கொத்தா எடுத்துட்டு போக” என்று துஷாரா பாணியிலேயே சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். படக்குழு சார்பான அறிவிப்புகளை தொடர்ந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மறுதினம் வெளியாகும் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

துஷாரா விஜயனைத் தொடர்ந்து, நடிகை ரித்திகா சிங்-ம் படத்தில் இணைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

இறுதிச் சுற்று படத்தில் தொடங்கி ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே, கிங் ஆஃப் கோதா என்று கதைக்களத்தை தேர்வு செய்து வரும் ரித்திகா, தலைவர் 170 படத்திலும் கலக்கி எடுப்பார் என்று எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com