"துரோகிகளை இப்போதுதான் பார்க்கிறேன்"- டப்பிங் யூனியன் தேர்தல் தொடர்பாக ராதாரவி பேட்டி

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 17-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டி
நடிகர் ராதாரவி
நடிகர் ராதாரவிபுதிய தலைமுறை

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 17-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், டப்பிங் யூனியன் தேர்தல் தொடர்பாக தலைவரும் நடிகருமான ராதாரவி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

"இந்த முறை நடக்கும் டப்பிங் யூனியன் தேர்தலில் நான் தலைவருக்கு போட்டியிடுகிறேன். மொத்தம் 1645 வாக்குகள் இருக்கிறது. இதுக்கே இந்த போராட்டம் என்றால், ஓட்டு எண்ணிக்கை அதிகமானால் இன்னும் போராட்டம் அதிகமாக இருக்கும். போராட்ட காலங்களில் ஒதுங்கி விடாமல் அதை எதிர்த்துதான் நிற்க வேண்டும்.

NGMPC22 - 147

எனக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை. எதிரிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் துரோகிகளை இந்த தேர்தலில் தான் பார்க்கிறேன். அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு யூனியன் என்றால், என்னென்ன செய்யப் போகிறோம் என்று சொல்ல வேண்டும். நான் தைரியமாக தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். நிச்சயமாக நம் அணி பெரிய அளவில் வெற்றி பெறும். இருந்தாலும் புதிய முகங்களையும், பழைய முகங்களையும் தேர்தலில் நிறுத்துகிறோம். ஆர்வம் இருப்பவர்களை சேர்த்துக் கொள்வேன்.

இந்த முறையும் எனக்கு வாக்களித்து ராதாரவி தலைமையிலான அணி வெற்றி பெற்றால் தான் சந்தோஷம்." என்று ராதாரவி கூறினார்.

மேலும் இதுகுறித்து நமது செய்தியாளர், ”யூனியனில் 70 ரசீது ஒரே நம்பரில் இருப்பதாகவும், அதில் ஒரு ரசீது ஜோசப் விஜய் பெயரில் இருப்பதாகவும் மோசடி நடக்கிறது என்று ராஜேந்திரன் குற்றச்சாட்டு குறித்த உங்களின் பதில் என்ன?” என்ற கேள்விக்கு,

NGMPC22 - 147

”ஒரு வருடமாக அவர் இதை பார்க்காமல் என்ன செய்தார்? 40 வருடமாக கூட இருந்து எதுவும் கற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு இது ஒரு உதாரணம். ஸ்ருதிஹாசன், பாடகர் கார்த்தி எங்கள் மெம்பர். இவர்களுக்கு நான் சந்தா கட்டுகிறேன். எந்த தேர்தலிலும் விஜய் சார் ஓட்டு போட்டதில்லை , ஆடிட்டர் சொன்னதன் பேரில்தான் ரசீது வழங்கப்பட்டுள்ளது, அவர் சொன்ன குற்றச்சாட்டுக்கு விளக்கம் சொல்ல வரவில்லை”

ராதாரவியின் வயது அதிகமாக இருப்பதால் அவரை வெற்றி பெற செய்துவிட்டு, வேறு ஒருவரை தலைவராக்குவது குறித்த விமர்சனத்துக்கு,

“யூனியனை விற்க போவதில்லையே. சட்டப்படி யூனியனை விற்க முடியாது. நான் தலைவரானால் உப தலைவரை கொண்டு வரலாம். ஆனால் கதிரை அதில் கொண்டு வர முடியாது. இதில் யாரும் சோடையானவர்கள் கிடையாது. கடந்த முறை நான் சொன்னதை அவர் இப்போது தூக்கிக் கொண்டு பேசுகிறார். நான் நிற்கிறேன் என்று சொல்பவர்களை நிற்கக் கூடாது என்று முறைப்படி சொல்லக் கூடாது”

நடிகர் ராதாரவி
“மக்களவை தேர்தலில் போட்டியா? தலைமை எதை சொன்னாலும் செய்ய தயார்” - அண்ணாமலை

லியோ படத்துக்கு சின்மயி டப்பிங் பேசிய விவகாரம் குறித்த கேள்விக்கு,

”சின்மயியை டப்பிங் கொடுக்க வைத்ததற்கான அபராதத்தை லோகேஷ் கனகராஜ்தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. டப்பிங் யூனியனின் விதிமுறைகள் குறித்து அவருக்கும் தெரியாது. விவகாரம் தொடர்பாக, நான் போன் பண்ணி சொன்னதும் ஒப்புக் கொண்டார். அபராதத்தொகை யூனியனுக்கு வந்துவிட்டது, அதுபோதும்” என்றார்.

தொடர்ந்து, சின்மயி விவகாரம் குறித்து பேசிய நடிகர் கதிர், ”லியோ படத்துக்கு சின்மயியை நான் பேச விட்டதாக ராஜேந்திரன் கூறுகிறார். சின்மயியை நாங்கள் பேச விடவில்லை. இரவில திருட்டுத்தனமாக டப்பிங் பேசினார்கள். சின்மயி இதுதொடர்பாக ட்விட்டரில் போட்ட பிறகுதான், இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்தோம். ராதாரவி அண்ணன்தான் லோகேஷிடம் பேசினார்” என்று கூறினார்.

சின்மயியை இனி காம்பவுண்டில் கூட விடமாட்டோம்

தொடர்ந்து, சின்மயியை மீண்டும் யூனியனில் சேர்த்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கதிர், “சின்மயியை நாங்கள் வெளியே அனுப்பவில்லை. ஒவ்வொரு வருடமும் சந்தா கட்ட வேண்டும். கட்டவில்லை என்றால் மெம்பர்ஷிப் காலாவதியாகிவிடும். தான் சந்தா கட்டாததால் தனது உரிமையை அவரே இழந்து விட்டார்” என்றார். தொடர்ந்து பதிலளித்த ராதாரவி, ‘சின்மயி மீண்டும் வந்தால் நிச்சயமாக அந்த காம்பவுண்டில் கூட சேர்க்க மாட்டோம்” என்று காட்டமாக பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com