\
தியேட்டரில் வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் - நெட்டிசன்கள் சொல்வதென்ன?

தியேட்டரில் வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் - நெட்டிசன்கள் சொல்வதென்ன?

தியேட்டரில் வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் - நெட்டிசன்கள் சொல்வதென்ன?
Published on

டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் படம் குறித்து பாஸிட்டிவ் ரிவ்யூக்கள் வந்த வண்ணம் உள்ளன.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் டாக்டர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். டாக்டர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

படத்தின் முதல் பாதி முழுவதும் காமெடி காட்சிகளும், எமோஷனல் காட்சிகளும் சிறப்பாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க என்டர்டெயின்மெண்ட் திரைப்படம் என்றும், இன்ட்ரவல் சீன் ஈர்க்கும் வகையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் உழைப்பு படத்தில் தெரிகிறது எனவும் அவரது கேரியரில் முக்கியமான படமாக டாக்டர் இருக்கும் என நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சிவகாரத்திகேயனின் மெனரிசமும், யோகிபாபுவின் ஒன்லைன் காமெடிகளும் சிறப்பாக இருப்பகிறது.

பக்கா ஃபேமிலி என்டர்டெயினர் என்று டாக்டர் படத்துக்கான ரிவியூக்கள் பாசிட்டிவாக வந்துகொண்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com