புதுச்சேரி
புதுச்சேரிமுகநூல்

புதுச்சேரியில் அரசு சொத்தை நான் விலை பேசினேனா? - விளக்கமளித்த விக்னேஷ் சிவன்!

புதுச்சேரி விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கவே சென்றதாகவும், அப்போது மரியாதை நிமித்தமாக முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்ததாகவும் விளக்கமளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
Published on

புதுச்சேரியில் அரசு சொத்தை தான் விலை பேசியதாக வெளியான தகவல்களை இயக்குனர் விக்னேஷ்சிவன் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புதுச்சேரி விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கவே சென்றதாகவும், அப்போது மரியாதை நிமித்தமாக முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.

புதுச்சேரி
Top 10 சினிமா| படத்தை பார்த்து கண்கலங்கிய பிரதமர் மோடி To உருவ கேலி செய்தவருக்கு அட்லீ பதிலடி!

அப்போது, தன்னுடன் வந்திருந்த மேலாளர் தனிப்பட்ட முறையில் அமைச்சரிடம் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறியுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்த விவகாரத்தில் தன்னைப் பற்றி வெளியான மீம்ஸ் மற்றும் ஜோக்ஸ் நகைச்சுவையாக இருந்ததாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டடத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் விலை பேசியதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com