இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்முகநூல்

இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!

இயக்குநர் வேலு பிரபாகரன் தனது வயது 68 வயதில் உடல்நல குறைவால் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி வெளியாகி திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Published on

1980 ஆம் ஆண்டு ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இதனையடுத்து, 1989ம்‌ ஆண்டு வெளியான நாளைய மனிதன் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வேலு பிரபாகரன்.

இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
Gallery: மாரீசன் Exclusive stills

அதனை தொடர்ந்து சத்யராஜ் நடித்த பிக்பாக்கெட், மோகன் நடித்த உருவம், பிரபுவின் உத்தமராசா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னர் புதிய ஆட்சி, அசுரன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பின்னர், நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய இவர் பதினாறு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3, ரெய்டு, வெப்பன், கஜானா போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிக மோசமடைந்தது. இதன்பின்னர், கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு வெண்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
30 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்ஷா ரீ ரிலிஸ்!

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று(18.7.2025) காலை 5.30 மணிக்கு காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com