பாட்ஷாpt web
சினிமா
30 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்ஷா ரீ ரிலிஸ்!
90’ஸ் கிட்சின் ஃபேவரட் படமான ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகிறது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1995ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வெளியானது பாட்ஷா திரைப்படம். மாஸ் ஹீரோவான ரஜினிகாந்தின் மார்க்கெட்டை மேலும் உயர்த்திய பாட்ஷா திரைப்படம், அவரது ரசிகர்கள் மட்டுமில்லை, 90’ஸ் கிட்சின் ஃபேவரட் கூட...
கேங்ஸ்டர், குடும்பத்தை தாங்கும் மூத்த பிள்ளை என ரஜினிகாந்தின் மாறுபட்ட தோற்றம், ரகுவரனின் வில்லத்தனம், தேவாவின் துள்ளல் இசை, பி.ஜி.எம்., கதைக்களம் என பாட்ஷாவை கொண்டாடாதவர்கள் யாருமில்லை என்றே கூறலாம்.
1995இல் வெளியாகி திரையரங்குகளில் ஓராண்டுக்கு மேலாக ஓடி மாபெரும் வெற்றி பெற்ற பாட்ஷா திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு 4K மற்றும் Dolby Atmos ஒலியில், அதிநவீன தொழில்நுட்பத்தால் மீட்டு உருவாக்கம் செய்யப்பட்டு படம் மறு வெளியீடு செய்யப்படுவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமண உறவு பிரச்னைகள் | ரகசிய ஆடியோ பதிவும் இனி சாட்சியே .. எப்படி சாத்தியம்? - வழக்கறிஞர் விளக்கம்