Ethirneechal | அடுத்த ஆதி குணசேகரன் யார்? போட்டுடைத்த டைரக்டர் திருச்செல்வம்

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடித்த மாரிமுத்து குறித்தும், பாத்திரத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் பகிர்ந்துள்ளார் சீரியலின் டைரக்டர் திருச்செல்வம்.
ஆதி குணசேகரன் கதாப்பாத்திரம் யாருக்கு ?- டைரக்டர் திருச்செல்வம்.
ஆதி குணசேகரன் கதாப்பாத்திரம் யாருக்கு ?- டைரக்டர் திருச்செல்வம்.முகநூல்

இதுதொடர்பாக அண்மையில் பேசியிருக்கும் அவர், "எதிர்நீச்சல் கதையை நடிகர் மாரிமுத்துவிடம் ஒன்றரை மணி நேரத்தில் சொன்னேன் நான். அவருக்கும் பிடித்துப்போனது, எனக்கும் பிடித்துப்போனது. பின்னர் சில காரணங்களால் சில நாட்கள் தள்ளிப்போனது. பின்னர் இருவருமே பேசி சீரியலை தொடங்னோம்.

மறைந்த நடிகர் மாரிமுத்து
மறைந்த நடிகர் மாரிமுத்து முகநூல்

ஆதி குணசேகரனுக்கு நெஞ்சு வலி வருவது போல காட்சி அமைத்தது கதைக்காகத்தான். அவருடைய காட்சிகளை காட்ட வேண்டும் என்று நினைத்தால் இன்னும் 100 நாளுக்கு நகர்த்தலாம். ஆனால் அனைத்தையும் தாண்டிய மனிதம் தேவை. அவருடைய ரீ கலெக்ஷன் காட்சிகளை இனி போட மாட்டோம். கதையின் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி நகர்ந்து வருகிறோம். ஆதி குணசேகரனை தேடுவது போலத்தான் கதை நகரும். ஆதி குணசேகரன் பாத்திரத்தில் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அது அவருக்கானது.

ஆதி குணசேகரன் கதாப்பாத்திரம் யாருக்கு ?- டைரக்டர் திருச்செல்வம்.
‘ஏம்மா ஏய்.. உனக்கென்னம்மா ஆச்சு..’ - எதிர்நீச்சல் நடிகை மருத்துவமனையில் அனுமதி!

மாரிமுத்து இல்லாத முதல் நாளில் 4 மணி நேரத்துக்கு அமைதியாக அமர்ந்திருந்தோம். 100 பேர் நடிச்சாலும் ஆதி குணசேகரன் பாத்திரம், மாரிமுத்துவின் பொக்கிஷம்" என்று உருக்கமாக பேசினார்.

மேலும், "நாங்கள் பேசும்போது சினிமாவை பற்றி மட்டுமே பேசினோம். தனது குடும்பம் மட்டுமே உலகம் என்று வாழ்ந்தவர் அவர். மிகுந்த ரசனை மிகுந்தவர். ஜெயிலர் படத்தில் நடித்ததை தொடர்ந்து, அவரை பிரதானமாக வைத்து படம் எடுக்க பல வாய்ப்புகள் வந்தன. அவரை நாம் என்றென்றும் கொண்டாட வேண்டும்" என்று பேசினார்.

ஆதி குணசேகரன் கதாப்பாத்திரம் யாருக்கு ?- டைரக்டர் திருச்செல்வம்.
Ethirneechal Serial | அடுத்த ஆதி குணசேகரன் யார்? இயக்குநர் திருச்செல்வம் கொடுத்த Twist!
இயக்குநர் திருச்செல்வம்
இயக்குநர் திருச்செல்வம்

இதன் மூலம் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் விரைவில் வேறொரு நடிகர் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இருந்தபோதிலும், நடிகர் மாரிமுத்துவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com