\
வேள்பாரி - இயக்குநர் ஷங்கர்
வேள்பாரி - இயக்குநர் ஷங்கர்புதிய தலைமுறை

“வேள்பாரி நாவல் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்துவதை தவிர்க்கவும்” - இயக்குநர் ஷங்கர்!

வேள்பாரி நாவலில் உள்ள முக்கிய காட்சிகளை படங்களில் பயன்படுத்துவதற்கு இயக்குநர் ஷங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Published on

வேள்பாரி நாவலில் உள்ள முக்கிய காட்சிகளை படங்களில் பயன்படுத்துவதற்கு இயக்குநர் ஷங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “சு. வெங்கடேசனின் வீரயுக நாயகன் வேள்பாரி நாவலில் உள்ள பல முக்கிய காட்சிகள், எந்த அனுமதியும் இன்றி பல படங்களில் பயன்படுத்தப்படுகிறது. அந்த நாவலின் பதிப்புரிமையை வைத்திருக்கும் எனக்கு அது கவலையை அளிக்கிறது.

வேள்பாரி நாவல்
வேள்பாரி நாவல்

சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லரில், நாவலின் முக்கிய காட்சி பயன்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. திரைப்படங்கள், வெப்சீரிஸ் மற்றும் இதர ஊடகங்களில் இந்த நாவலின் காட்சிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

வேள்பாரி - இயக்குநர் ஷங்கர்
ரஷ்யாவில் விருது வென்ற கொட்டுக்காளி.. சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்குரல்.. தமிழில் பேசிய இயக்குநர்!

படைப்பாளிகளின் உரிமைகளை மதிக்க வேண்டும். அதை மீறி காட்சிகளை பயன்படுத்தினால் சட்டரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி உள்ள தேவாரா படத்தின் ட்ரெய்லரில் வேள்பாரி நாவலின் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்ட நிலையில், இயக்குநர் ஷங்கர் அதை மறைமுகமாக குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com