\
varanasi
varanasivaranasi function

அண்டார்டிகா to ராமாயணம் வரை.. 5 மடங்கு பெரியது ‘வாரணாசி’! - இயக்குநர் ராஜமவுலி

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் அடுத்தாண்டு வெளியாகவிருக்கும் திரைப்படம் வாரணாசி.
Published on: 
Summary

இயக்குநர் ராஜமவுலி இயக்கும் 'வாரணாசி' திரைப்படம், 'RRR' படத்தை விட 5 மடங்கு பெரியதாகவும், 1,300-1,400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, டைம் டிராவல் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன் அடிப்படையில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

மகேஷ்பாபு நடிப்பில் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிவரும் படம் `வாரணாசி'. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் அறிமுக விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது.

Mahesh Babu
Mahesh BabuVaranasi

இப்படத்தில் மகேஷ் பாபு ருத்ராவாகவும், ப்ரியங்கா சோப்ரா மந்தாகினியாகவும், பிருத்விராஜ் சுகுமாரன் கும்பாகவும் நடித்து வருகின்றனர். டைம் டிராவல் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி வருகிறது இப்படம். இந்தக் கதை அட்வென்சர் வகையில் இதிகாச கதையையும் உள்ளுக்குள் வைத்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வெளியாகி ராம், ஹனுமான் காட்சி இடம்பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே தயாராகிவரும் இப்படம் ஏப்ரல் 7, 2027 அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

varanasi
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!

இந்தசூழலில் தான் படம் குறித்து பேசியிருக்கும் இயக்குநர் ராஜமவுலி, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை விட வாரணாசி திரைப்படம் 5 மடங்கு பெரியது என பேசியுள்ளார்.

பிரேசிலில் நடைபெற்றசாவ் பாலோ சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய ராஜமவுலி, ''வாரணாசி' படத்திற்காக நான் இன்னும் அதிக ஆவணப் பணிகளைச் செய்தேன். அதனால் படப்பிடிப்பிற்கு இன்னும் அதிகத் தயாரிப்புடன் சென்றேன். நாங்கள் 'RRR' படத்தை 315 நாட்களில் முடித்தோம், ஆனால் அதைவிடப் 5 முதல் 6 மடங்கு பெரிய படமாக இருந்தபோதிலும் 'வாரணாசி'யை 275 நாட்களிலேயே படமாக்கினோம். இதன் மூலம் 40 நாட்கள் மிச்சமானது" என்று அவர் கூறினார்.

மேலும் மற்றொரு உரையாடலில் பேசிய அவர், ”வாராணசி அவருடைய லட்சிய திரைப்படம் என்றும், இப்படம் அண்டார்டிகாவிலிருந்து ஆப்பிரிக்கா வரை, இராமாயண காலப் பயணம், மற்றும் பிரம்மாண்டமான கடவுள்கள் என பயணப்பட்டாலும், முடிவில் அதன் மையத்தில் ஒரு தந்தை-மகன் பிணைப்பையும் மற்றும் காதலர்களின் உண்மையான உணர்ச்சிகளாலும் பிண்ணப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

மேலும், ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய எங்களது புராணங்கள் இதுவரை திரையில் காட்சிப்படுத்தப்பட்ட விதம் எனக்கு முழுத் திருப்தியை அளித்ததே இல்லை. இந்தப் படத்தில் ராமாயணத்தைத் தழுவிய ஒரு பிரத்யேகக் காட்சி உள்ளது. அந்த லுக்கில் மகேஷ் பாபுவைப் பார்த்தபோதே எனக்குச் சிலிர்த்துவிட்டது. ராமர் காட்சியை மட்டும் நாங்கள் சுமார் 60 நாட்கள் படமாக்கினோம். இது விஷுவலாக மட்டுமன்றி, உணர்ச்சிப்பூர்வமாகவும் ரசிகர்களைப் பெரிதும் தொடும்” என்றும் கூறியுள்ளார்.

வாரணாசி படம் சுமார் 1,300 முதல் 1,400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், இப்படம் ஐமேக்ஸ் திரைக்காக படம்பிடிக்கப்பட்டு வருகிறது.

varanasi
’பாத்திரம் கழுவியது முதல் பத்ம ஸ்ரீ வரை..’ உத்வேகத்தின் மறுஉருவம்! யார் இந்த செஃப் தாமு?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com